நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களின் பயற்சி முகாம் நிறைவு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. அதில் பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே, முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர் கூறியதாவது: இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு. அந்த பன்முகத்தன்மைக்கு அளிக்கும் மரியாதை, சகிப்புத்தன்மை ஆகியவற்றின் மூலமே நாம் நம்முடைய வலிமையை பெறுகிறோம். அதை நாம் பெருமையுடன் கொண்டாடி வருகிறோம் என்று கூறினார்.
பிரணாப் முகர்ஜியின் இந்த உரைக்கு பின் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் சேர அதிகம் பேர் ஆர்வம் காட்டுவதாக அந்த அமைப்பின் மூத்த தலைவர் விப்லப் ராய் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பிரணாப் கலந்து கொண்ட பின், எங்கள் அமைப்பில் இணைய பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். முன்னதாக, தினமும் 350 விண்ணங்கள் வந்து கொண்டிருந்தன. ஆனால், பிரணாப் கலந்து கொண்ட பின் தினமும் 1,200 முதல் 1,300 விண்ணப்பங்கள் வரை வந்து கொண்டிருக்கின்றன. அதிலும் பெரும்பாலான விண்ணப்பங்கள் பிரணாப்பின் சொந்த மாநிலமான மேற்கு வங்கத்திலிருந்து வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொடர்பு செய்திகள் : ஆர்.எஸ்.எஸ் , ஹூரியத் மாநாட்டுக்கட்சியை பிரிவினைவாத அமைப்புகள் : அமெரிக்க சி.ஐ.ஏl