நேரு காலத்தில் அலகாபாத் உள்ளூர் அரசியலில் நுழைந்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் தன் உறுதியான நேர்மையின் காரணமாக புகழ் பெற்றார்.

Special Correspondent

1974 ஆம் ஆண்டு இந்திராகாந்தி மந்திரி சபையில் துணை வர்த்தக மத்திய மந்திரி ஆகி அரசியல் வாழ்வு நேர்மையாக இருந்ததால் இந்திரா காந்தி 1980 களின் இவரை உத்திரப் பிரதேசத்தின் முதல் அமைச்சராக ஆக்கிய நேரத்தில், உத்திரப் பிரதேசத்தின் தென் மேற்கு மாவட்டங்கள் வழிப்பறி, கொள்ளை போன்றவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. 1983 இல் இவரின் மேற்பார்வையில் பயங்கரமான கொள்ளையர்கள் சரண் அடைந்தனர்.

ஆனாலும் சில சில வழிப்பறி, கொள்ளையை முழுவதுமாக தடுக்கமுடியாததால் இதற்கு தானே பொறுப்பேற்றுக்கொண்டு பதவி விலக முன்வந்தார். இவரின் இச்செய்கை இவருக்கு இந்தியா முழுவதும் நல்ல பெயரை பெற்று தந்தது.

இதனால் 1984ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இராஜீவ் காந்தி தலைமையிலான இந்திய தேசிய காங்கிரஸ் ஆட்சியில் முக்கியத்துவம் வாய்ந்த நிதி அமைச்சகத்துக்கு இவரை அமைச்சராக்கினார்.

இராஜீவ் நினைத்தபடி லைசன்ஸ் ராஜ்' முறையை சீராக தளர்த்தி வந்தார். இந்தியாவில் தங்கம் விலை அதிகமாக இருந்ததால் அதிகளவில் தங்கக் கடத்தல் இருந்துவந்தது. தங்கத்திற்கான வரியைக் குறைத்தும், கடத்தப்பட்ட தங்கத்தை பிடிக்கும் காவல்துறையினருக்கு அவர்கள் பிடித்த தங்கத்தில் சிறியதை ஊக்கமாக கொடுத்தும் தங்கக் கடத்தலை கட்டுக்குள் கொண்டுவந்தார்.

சோதனைகளை நடத்தியது. குறிப்பாக திருபாய் அம்பானி , அமிதாப் பச்சன் போன்ற அதிகாரவட்ட செல்வாக்குள்ள பலர் சோதனைக்குள்ளாகினர்.

இதனால் அவர்கள் தந்த அழுத்தம் காரணமாக நிதி அமைச்சராக அவர் எடுத்த நடவடிக்கைகள் புகழடைந்ததால் அமைச்சரவையை விட்டு அவரை விலக்க முடியாமல் ராஜிவ் காந்தி அவருக்கு மற்றொரு முக்கிய துறையான பாதுகாப்பு துறை ஒதுக்கினார்.

பீரங்கி பேர ஒப்பந்தத்தில் நடந்த முறைகேடு தொடர்பான தகவல்கள் அவை ராஜிவ் காந்தி பிரதமரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் என்றும் செய்திகள் வர காரணமாக காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரிலிருந்து இவர் தன்னை விலகிக்கொண்டார், மக்களவை உறுப்பினர் (அலகாபாத் தொகுதி) பதவியையும் இராஜினாமா செய்தார்.

Special Correspondent

அமுலாக்கப்பிரிவுக்கு அதிக அதிகாரங்களை கொடுத்தார். வரிஏய்ப்பு செய்பவர்களுக்கு எதிராக இப்பிரிவு பல அதிரடி பின்னர் தெற்கில் தெலுஙகு தேசம்,(ராமராவ் ) திமுக (கருணாநிதி) கிழக்கில் மாணவர் இயக்கம் அசாம் கணபரிஷித் உடன் சேர்ந்து தேசிய முண்ணனி அமைப்பை உருவாக்கி அதனை வெற்றி அணியாக்கினார்.

இராஜிவ் காந்திக்கு மாற்றாக காங்கிரஸ் எதிர் அணியினர் வி. பி. சிங்கையே தூய்மையான மாற்று பிரதம வேட்பாளராக முன்னிருத்தி இருந்த போதிலும் டிசம்பர் 1, 1989 அன்று வி.பி.சிங் நாடாளுமன்றத்தின் நடு அவையில் தேவிலாலை பிரதமர் பதவிக்கு பரிந்துரைத்தார்.

Special Correspondent

அரியானாவின் ஜாட் தலைவரான தேவிலால் அப்பரிந்துரையை மறுத்து வி.பி.சிங்கையே பிரதமர் பதவிக்கு பரிந்துரைத்தார்.

காங்கிரஸ் அல்லாத கட்சிகளுடன் இணைந்து மத்தியில் முதல் கூட்டணி அரசை அமைத்தவர் என்ற பெருமையும் வி.பி.சிங்குக்கு உண்டு.

டிசம்பர் 2, 1989 லிருந்து நவம்பர் 10 1990 வரை இவர் இந்தியாவின் பிரதம மந்திரியாக இருந்த காலத்தில் இவரின் முக்கிய சாதனையாக கருதப்படுவது :

மண்டல் கமிசன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த செய்த முடிவு. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பொதுத்துறை அமைப்புகளில் வேலை வாய்ப்புகளில் குறிப்பிட்ட விழுக்காடு இடங்களை ஒதுக்கீடு செய்ய மண்டல் கமிசன் பரிந்துரைத்தது. வட இந்தியாவில் இம்முடிவுக்கு பிற்படுத்தப்பட்ட மக்கள் அல்லாதவர்களிடம் கடும் எதிர்ப்பு ஏற்பட்டு நகர்புறங்களில் போராட்டங்கள் நடைபெற்றது.

இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் 1992-ம் ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசின் உத்தரவு செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியபோது, `இந்த தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது. பல்லாண்டுகளாக சுரண்டப்பட்டு வந்தவர்களுக்கு இந்த தீர்ப்பு மகத்தான வெற்றியாகும்' என்று வி.பி.சிங் மகிழ்ச்சி தெரிவித்து இருந்தார்.

1989 இல் அம்பானி லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். 1990 இல் லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின் முழு நிர்வாகத்தை கைப்பற்ற திருபாய் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் மேற்கொண்ட முயற்சிகளை அரசு நிதி நிறுவனங்களான ஆயுள் காப்பீட்டு நிறுவனம் மற்றும் பொது காப்பீட்டு நிறுவனம் ஆகியவை தடுத்தன. இதனால் வேறு வழியின்றி அம்பானி அந்நிறுவனத்தின் செயற்குழு & தலைவர் பதவியிலிருந்து விலகிக்கொண்டார்.

Special Correspondent

இராம ஜென்மபூமி இயக்கத்துக்கு ஆதரவு திரட்ட பாஜகவின் தலைவர் எல் கே அத்வானி வட இந்திய மாநிலங்களில் இரத யாத்திரை மேற்கொண்டார். அவருடைய இரத யாத்திரை அயோத்தியை அடையும் முன்னர் பீகாரில் கைது செய்யப்பட்டார். இதனால் பாஜக தேசிய முன்னணிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக்கொண்டது.

இதைத்தொடர்ந்து நாடாளுமன்றத்தில் வி. பி. சிங் கொண்டு வந்த அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜகவும் காங்கிறசும் இணைந்து ஒன்று சேர்ந்து விபிசிங்கை தோற்கடித்தது.

பின்னர் வந்த சந்திரசேகர் 54 எம்பிக்கள் தலைமை ஆட்சியில், சுப்பரமணி சட்ட அமைச்சர் ஆக அவர் அன்றைய எதிர்கட்சி தலைவர் ஜெயலலிதா உடன் கைகோர்த்து, இந்திய அரசின் ரகசியங்களை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு திமுக அரசு தெரிவிப்பதாகக் கூறி தி.மு.க. அரசை 30 ஜனவரி 1991 அன்று பதவி நீக்கம் செய்யப்படுகிறது.

திமுக ஆட்சி கலைக்கபட்டு மூன்றறை மாதம் கழிந்த நிலையில் ராஜிவ் காந்தி கொடுரமான முறையில் கொல்லப்படுகிறார்...

அப்போதய சட்ட அமைச்சர் சுப்ரமணிசாமியை பின்னர் விசாரித்த ஜெயின் கமிஷன் அவரை பகீரங்கமாக குற்றம் சாட்டுகிறது...

சமூகநீதி காவலர் பிரதமர் விபி.சிங்கை 5 வருடம் ஆட்சி செய்ய அனுமத்திருந்தால் ராஜிவ் காந்தி மரணமும், ஜெயலலிதா ஒரு ரூபாய் சம்பளம் வாங்கி ஊழலின் 66கோடி குவித்த சொத்து குவித்த வழக்கும் இருந்து இருக்காது...

சரித்திரம் உருவாக்கிய சம்பவங்கள் விசித்திரமானது...