சென்னை மெரினாவில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் அமைப்பதற்கு மாநில கடலோர ஒழுங்குமுறை அனுமதி வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் துரைசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

Special Correspondent

இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மார்ச் மாதம் நினைவிடம் கட்ட ஒரே நாளில் மத்திய அரசு ஜெயலலிதா நினைவிடம் அமைக்க அனுமதி வழங்கியதாகவும், கடலோர ஒழுங்குமுறை ஆணையம் முறைகேடாக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் வழக்கறிஞர் துரைசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

இதற்க்கு பதில் அளித்த ஜெயலலிதா நினைவிடம் கட்ட அனைத்து அனுமதிகளும் பெற்பட்டுள்ளது என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Special Correspondent

மேலும் ஜெயலலிதா நினைவிடத்தால் சுற்றுசூழல் பாதிப்போ, நீர்நிலைகள் பாதிப்போ இல்லை என்றும் தொழிற்சாலைகளும் கிடையாது என்றும் கழிவறைகள் கூட கடலில் கலக்காத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தது.

மேலை நாடுகள் கடற்கரையை சுற்றுலாத் தலங்களாக மாற்றி வருகின்றன என்றும் 5,571 சதுர மீட்டர் பரப்பளவில் மட்டுமே ஜெயலலிதா நினைவிடம் அமைக்கப்படவுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து மத்திய, மாநில அரசுகள் பதில்தர உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஜூலை 9-ம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

முன்னதாக ஜெயலலிதா சொத்து குவித்த வழக்கில் தண்டிக்கப்பட்ட குற்றவாளி எனவே அவரிக்கு அரசின் செலவில் மக்கள் வரி பணத்தில் மணி மண்டபம் கட்டுவது தவறு என்ற வழக்கு தலைமை நீதிபதி முன் வந்த போது தனிபட்ட முறையில் அரசு செலவில் மக்கள வரி பணத்தில் கட்டப்படும் இந்த மணிமண்டபம் தமக்கு உடன்பாடு இல்லை என்று அவர் கூறியதும் கூறிப்படதக்கது...

தொடர் செய்திகள் : துணை வட்டாட்சியருக்கும் துப்பாக்கிச் சூட்டிற்கும் சம்பந்தம் இல்லை