தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 99 நாட்கள் அமைதியாக போராடிய மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க பேரணியாக சென்றனர்.
144 தடை உத்தரவை மீறியதால் போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முயன்றனர். எனினும் கூட்டம் கலையாமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி தொடர்ந்து முன்னேறியது. அப்போது அங்கிருந்த போலீஸாருக்கும் - பொதுமக்களுக்கும் இடையே மோதல் மூண்டது.
இறுதியில் கலவரம் வெடித்தது. கலவரத்தை கட்டுப்படுத்த திணறிய போலீஸார் யாரும் எதிர்பாராதவிதமாக மக்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதில் ராணுவத்தில் பயன்படுத்த பட்ட ச்னைபர் 7.62 தூப்பக்கியை போலிசார் உடையில் அல்லதவர் பயன்படுத்தி சுட்ட காட்சி வரைலாக சமூகவலைதளத்தில் பரவி பர்ப்போரை அதிரவைத்தது...
துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தருக்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர் என பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்திருந்தனர். மேலும் துப்பாக்கிச்சூட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது.
இந்நிலையில் அரசு தலைமை வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்று , இந்த சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சென்னைக்கு மாற்ற கூறி தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
ஐகோர்ட் மதுரை கிளையில் இச்சம்பவம் குறித்த 10 வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வழக்குகள் தொடர்பான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜூலை 2-ம் தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் செய்திகள் : துணை வட்டாட்சியருக்கும் துப்பாக்கிச் சூட்டிற்கும் சம்பந்தம் இல்லை