நரேந்திர மோடி திருமணம் ஆகாதவர் என மத்திய பிரதேச மாநில கவர்னர் ஆனந்தி பென் பட்டேல் தெரிவித்துள்ள கருத்தால் பெரும் சர்ச்சை கிளம்பி உள்ளது. இதற்கு தற்போது, மோடியின் மனைவி ஜசொதா பென் அவேசத்துடன் பதிலடி கொடுத்து உள்ளார்.
மத்திய பிரதேச மாநில கவர்னராக இருக்கும் ஆனந்தி பென், அங்குள்ள கர்தா மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கர்தா மாவட்டத்தில் உள்ள திமாரி என்ற இடத்தில் அங்கன் வாடி ஊழியர்கள் மத்தியில் கவர்னர் உரை நிகழ்த்தினார். அப்போது பிரதமர் நரேந்திர மோடியை பற்றியும், அவருடைய செயல்பாடுகள் பற்றியும் பெருமையுடன் ஊழியர்களுக்கு எடுத்துரைத்து உள்ளார்.
அப்போது, "மோடி திருமணம் ஆகாதவர் என்பது உங்களுக்கு தெரியும்...
அவர் திருமணம் ஆகாதவர் என்றாலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் பிரச்சனைகள் பற்றி நன்கு அறிந்தவர் என தெரிவித்து உள்ளார்.
அதே போன்று குழந்தைகள் பிறப்பதற்கு முன்பும், பிறந்த பின் ஏற்படும் தேவைகளை பற்றியும் நன்கு அறிந்தவர் பிரதமர் என அவர் தெரிவித்து இருந்தார்.ஆனால் 2014 ஆம் ஆண்டு நடைப்பெற்ற பாராளுமன்ற தேர்தலின் போது கூட வேட்பு மனுவில் ஜசோதா பென் தன் மனைவி என குறிப்பிட்டு இருந்தார் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் இது குறித்து பதில் அளித்துள்ள மோடியின் மனைவி ஜசொதா பென், ஆனந்திபென்னின் பேச்சு மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த 2004 ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் போது, தான் திருமணம் ஆனவர் என்றும், எனது பெயரை மனைவி என குறிப்பட்டு உள்ளார்.
குஜராத்தின் முன்னாள் முதல்வராக இருந்த நன்கு படித்த ஒரு பெண்மணியே, சாதாரண என்னை போன்ற ஆசிரியர் போல் பேசி உள்ளார்.
இவருடைய பேச்சு பிரதமரின் மரியாதை கெடுக்கும் வகையில் உள்ளது.
மோடி எனக்கு மிகவும் மரியாதைக்குரியவர். அவர் எனக்கு எப்போதும் ராமர் எனவும் தெரிவித்து உள்ளார் பிரதமரின் மனைவி.
தொடர் செய்திகள் : வாட்ஸ் அப் மூலமாக அனுப்பப்படும் லீகல் நோட்டீஸ்களும் செல்லும்: மும்பை உயர் நீதிமன்றம்