சிவகங்கையில் நடைபெற்ற பொதுகூட்டம் ஒன்றில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் "விடுமுறை கிடைக்கும் என்பதற்காகவே மாணவர்கள் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறியுள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Special Correspondent

எற்கனவே மறைந்த முதல்வர் ஜெயலலிதா கொள்ளையடித்தார் என்று அவர் பேசியதால் ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள், இப்படி ஒரு கருத்தை கூறி தொடர்ந்து அதிமுகவின் மந்திரிகளின் மூத்த சர்ச்சை நாயகனாக நீடிக்கிறார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.

இதனிடையே திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்றால் மக்கள் தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும் என வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் பேசியிருப்பதும் மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது போதாது என்று இந்திரா காந்தி முதலமைச்சராக இருந்தார் என சுகாதார துறை அமைச்சர் பேசியிருந்தது கடும் விமர்சனத்திற்குள்ளானது.

முன்னதாக பொது கூட்டத்தில் பகீரங்கமாக ஜெயலலிதா மருத்துவமைனயில் இட்லி சப்பிட்டார் என்று தான் கூறியது பொய் என திண்டுக்கல் சீனிவாசன் பேசியது அதிர்வலைகளை கிளப்பியதும் குறிப்பிடதக்கது.

தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் பேசுவதாக நினைத்து கொண்டு உளறி கொட்டும் வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அமைச்சர்களின் பொறுப்பற்ற பேச்சுக்கு அதிமுகவிலே பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தொடர் செய்திகள் : ஐந்து பேர் கொண்ட மருத்துவக் குழுவில் நான்கு பேர் ஜெயலலிதாவை சந்திக்கவில்லை