தெலுங்கு பட தயாரிப்பாளர் கிஷான் மோடுகுமுடி. இவரது மனைவி சந்திரகலா. ஐதராபாத்தை சேர்ந்த இவர்கள், அமெரிக்காவுக்கு நடிகைகளை அழைத்துச்சென்று விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

Special Correspondent

போலீசார் சோதனை நடத்தி விபசாரத்தில் ஈடுபட்ட நடிகைகள் வீடியோவை கைப்பற்றி உள்ளனர். அதில் இருக்கும் நடிகைகள் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

இதுகுறித்து தெலுங்கு பிரபல நடிகை ஸ்ரீரெட்டி கூறியதாவது :

விபசாரத்தில் ஈடுபட்ட நடிகைகள் விவரங்களை நான் வெளியிட்டால் பலருக்கும் அதிர்ச்சி ஏற்படும். அங்கு விபசாரத்தில் ஈடுபட்ட நடிகைகள் விவரம் என்னிடம் உள்ளது. பாலியல் தொழிலுக்காக என்னையும் அந்த தம்பதியினர் அமெரிக்காவுக்கு அழைத்தனர். நான் செல்லவில்லை.

நடிகைகளுக்கு இருக்கும் புகழை வைத்து அவர்களுக்கு வசூலிக்கப்படும் கட்டணம் வித்தியாசப்படும். மார்க்கெட் இழந்த நடிகைகள் அமெரிக்கா சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுகிறார்கள். பிரபல நடிகைகள், டி.வி.நிகழ்ச்சி தொகுப்பாளர்களும் இதில் அடக்கம் என்று கூறியுள்ளார்.

முன்னதாக 90 சதவிகித நடிகைகள் பாலியல் துன்புறுத்தல்களால் அவதிப்படுவதாகவும் தெரிவித்து இருந்தார் ஶ்ரீ ரெட்டி. மேலும் (12-04-2018) திரைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் (Movie Artistes Association) முன்பு ஆடைகளைக் களைந்து அரைநிர்வாணமாகப் போராட்டம் நடத்தி கண்டனம் தெரிவித்தார். பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்த இவர், `எனக்கிருக்கும் ஒரேவழி இப்படிப் போராடுவதுதான். அரைநிர்வாணமாகப் போராட்டம் நடத்தினால் மட்டுமே மக்கள் காது கொடுத்துக் கேட்பார்கள் என்றார்.

Special Correspondent

இந்த விவகாரம் தொடர்பாக திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் ரகுல் ப்ரீத் சிங், மஞ்சு லக்‌ஷ்மி, இயக்குநர் நந்தினி ரெட்டி ஆகியோர் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினர். `ஶ்ரீ ரெட்டி கூறுவதுபோல் எந்தப் பாலியல் துன்புறுத்தல்களையும் நான் அனுபவிக்கவில்லை' என மறைமுகப் பதிலளித்தார் ரகுல் ப்ரீத்.

ஆனால், டோலிவுட்டில் இதுவரை `Committee against sexual harassment' என்ற ஒரு அமைப்பே நிறுவப்படவில்லை. இதுதொடர்பாக இயக்குநர் நந்தினி ரெட்டி, `CASH என்ற அமைப்பு டோலிவுட்டுக்கு கண்டிப்பாக அவசியம். சில சமயம் பாலியல் துன்புறுத்தல்கள் நடந்தாலும், அதை சொல்ல இங்கே முறையான திட்டம் வகுக்கப்படவில்லை. சங்கம் விரைவில் இந்தத் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும்' என்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தது குறிப்பிடதக்கது.

தொடர் செய்திகள் : பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டேன் நடிகை அதிர்ச்சி தகவல்