டெல்லியில் மறைமுக ஜனாதிபதி ஆட்சி என்கிறாரே அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால்...
அங்கே 2015 ஆண்டு தேர்தலில் 70 இடங்களின் 67 இடத்தை 54% மக்களின் ஒட்டை வாங்கி வென்ற ஆம்அத்மிக்கு தினமும் தலைவலி தந்து கொண்டே இருக்கிறது பாஜக...
டெல்லில் படு தோல்வி அடைந்தும் 3 MLA மட்டுமே கொண்ட பாஜக ஆள ஆசைப்பட்டு அழிச்சாட்டியம் செய்தும் வருகிறது.
இது இப்போது 6 வது நாளாக உள்ளிருப்பு போராட்டம் டெல்லி முதல்வரே செய்யும் அளவுக்கு ஜனாநாயகம் சாக்கடையாகி துர்நாற்றம் வீச முற்றி போய் உள்ளது...
இதில் ஆம்அத்மி எக்கேடு கேட்டு போனால் என்ன என்ற நிலைபாட்டை, அங்கே பாஜகவின் ஜனாநாயக விதிமீறலை காங்கிரஸ் கூட கண்டு கொள்ளமல் இருப்பது தவறான அணுகுமுறை என்பதை மறந்தும் உள்ளது...
இங்கே தமிழ்நாட்டில் 2016 ஆண்டு தேர்தலில் 232 இடங்களின் ஒரு இடத்தை கூட பிடிக்க வக்கில்லாத பாஜக போட்டியிட்ட 232 தொகுதியில் 228 தொகுதியில் டெபாசிட் இழந்த பாஜக பன்வாரிலால் மூலம் நிர்மலாக்கள் சிரிக்க சிரிக்க ஆட்சி செய்து வருகிறது...
எடப்பாடியும் ஒபிஎஸ்ம் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் ஊழல் பணத்திலே 12% வரும் போதே ஜெயலலிதா கார் டயரை கும்பிட்டு விசுவாசத்தை காட்டியவர்கள்... இப்போது மோடி அரசோ ஊழல் பணத்தில் அவர்களுக்கு 40% கொடுத்து விட்டு 60% அது எடுத்து கொண்டு என்ற டீல்கள் வெளியே கசியும் நேரத்திலே...
H Raja க்கள் Tamilisai Soundararajan க்கள் சிரிக்க சிரிக்க இங்கு கிரிஜாவின் கொளுந்தன்கள் மகிழ்வுரும் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக தமிழ் நாட்டை பாஜக நேரடியாக ஆட்சி செய்து வருகிறது...
அசுர பலத்திலே பதவியில் இருக்கும் ஆம்அத்மியே திண்டாடும் போது ., Kalaignar Karunanidhi தலைமையில் இல்லாத திமுக,அதிமுக பினாமி பெயரில் சட்டத்தை மீறி இன்ஸ்பெக்டர் ஆணையில் 7.62 ஸ்னைபர் துப்பாக்கிகள் சீறி பாயும் பாஜக ஆட்சியை விழ்த்த தடுமாறும் வேளையில்...
கேஜ்ரிவாலை வைத்து கட்சி தொடங்கிய #RSS A team Kamal Haasan கேஜ்ரிவாலின் புலம்பல்களை கண்டு கொள்ளாமல் பிக் பாஸ் 2 ரீல் ஷுட்டிங் பார்க்க, அதே RSS B team Rajinikanth #tnjallinawalangh ரீயல் ஷுட்டிங் போய் பார்த்த இடத்திலே மக்களை சமூக விரோதிகள் என்று கூற கேக்கும் நகைமுரண்களையும் பார்க்கும் பாக்கியமும் தமிழக மக்களுக்கு கிட்டி உள்ளது...
நீதிமன்றமும் 18 தொகுதி கிட்டதிட்ட 52 லட்சம் மக்கள் ஓட்டு போட்டார்கள் என்ற கவலை கொஞ்சமும் மறத்து 142 நாட்கள் ஜட்ஜ்மெண்ட் ரிசர்வட் போட்டு பக்கவாத்தியம் பாக்கவாக வசித்து கூத்தும் நடத்துகிறது...
மூன்று எம்எல்ஏ மட்டும் இருந்தாலும் பதவி வெறி கொண்டு டெல்லியின் கேஜ்ரிவால் கூற்றுப்படி ஜனாதிபதி ஆட்சியை ஆளுனர் மூலம் ஆட்சி செய்யும் பாஜக, 228 தொகுதியில் டெபாசிட் கிடைக்கவிட்டாலும் தமிழ் நாட்டை ஆட்சி செய்தால், அது கள் குடித்து தினவெடுத்து செவ்வாழை தோட்டத்தில் குதித்து ஆடும் குரங்கை போல பாஜகவுக்கு இனிக்க தானே செய்யும்...
உழைக்காமல் சப்பிடும் ஓசி சாப்பாடு இனித்தாலும் எவ்வளவு நாள் தான் அது நீடிக்க முடியும் ...
தொடர் செய்திகள் : எதிர்கட்சிகள் எதிர்ப்பால் பதறும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சங்கம்