அமெரிக்காவின் நிதி மற்றும் வர்த்தக கொள்கைகள், உலக பொருளாதாரதிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் என சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உள்நாட்டு தொழிலையும் தொழிலாளர்களையும் பாதுகாக்கும் வகையில் இறக்குமதி பொருட்களுக்கு வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். உருக்கு, அலுமினியம் ஆகியவற்றின் மீது அமெரிக்கா இறக்குமதி வரி விதித்தது.
இதற்கு சீனா, கனடா உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அமெரிக்காவின் நடவடிக்கையால் உலக பொருளாதாரமே ஆபத்தை நோக்கி பயணிப்பதாக சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்காவின் பொருளாதாரம் நடப்பு ஆண்டில் எதிர்பார்த்தப்படியே இருப்பதாகவும் வரும் ஆண்டிலும் அது தொடர வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ள ஐஎம்எஃப், அமெரிக்காவின் நிதி மற்றும் வர்த்தக கொள்கைகளால் 2020ம் ஆண்டில் இருந்து உலக பொருளாதாரத்திற்கு ஆபத்து ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.