பெண்பத்திரிகையாளரை இழிவாக பேசியது தொடர்பாக நடிகர் எஸ்.வி.சேகரை ஏன் கைது செய்யவில்லை என திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

Special Correspondent

சுதந்திரமாக சுற்றித்திரிந்து வரும் எஸ்.வி.சேகர் போலீஸ் துணையுடன் உலா வருவதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

ஸ்டாலின் கேள்விக்கு பதிலளித்த சபாநாயகர் தனபால் நடிகர் எஸ்.வி.சேகர் பிரச்சனைக்கு வரும் 20ம் தேதி வரை பொறுத்து இருக்குமாறும், நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் எஸ்.வி.சேகர் குறித்து மு.க. ஸ்டாலின் தொடர்ந்து பேச சபாநாயகர் தனபால் அனுமதி மறுத்ததற்கு திமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்து, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தபின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ஸ்டாலின் பெண்பத்திரிகையாளரை தரக்குறைவாக நடிகர் எஸ்.வி.சேகர் விமர்சித்து உள்ளார். இதனையடுத்து அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கு தொடர்பாக முன்ஜாமீன் கோரிய எஸ்.வி.சேகரின் மனுவை ஏற்கனவே உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. தலைமை செயலாளரின் உறவினர் சேகர் என்பதால் கைது செய்ய அரசு தயக்கம் காட்டுகிறது என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

Special Correspondent

எஸ்.வி.சேகரை ஏன் கைது செய்யவில்லை என்று உயர்நீதிமன்றம் காவல்துறையை கேள்வி கேட்டுள்ளது. காவல்துறை பாதுகாப்புடன் சேகர் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். காவல் அதிகாரிகள் முன்னிலையில் டிவி தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வாக்களித்தார் என்றும் கூறியுள்ளார்.

பின்னர் பேரவையில் சபாநாயகர் தனபால் பேசும் பொழுது, 'நடிகர் எஸ்.வி.சேகரை இன்னும் கைது செய்யாதது ஏன் என்பதே எனது கேள்வி. நாம் அனைவரும் வரும் 20-ஆம் தேதி வரை பொறுத்திருக்கலாம். அன்றுதான் அவரை நீதிமன்றம் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது' என்று தெரிவித்தார்.

பேரவை நடைபெறும் பொழுதெல்லாம் வழக்கமாக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆஜராவது வழக்கம். ஆனால் கேள்வியை முன்னதாக அறிந்த கொண்ட காரணத்தால் எஸ்.வி.சேகர் விவகாரத்தின் பொழுது அவர் பேரவையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நீதிமன்றம் ஏன் கைது செய்யவில்லை என்று கேட்ட நிலையிலும் தனபால் 20ஆம் தேதி வரை பொறுப்போம் என்று கூறியது சட்டதை கேலி கூத்தாக்கும் செயல் என சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவுத்துள்ளனர்.

தொடர் செய்திகள் :போலிசார் தேடும் எஸ்.வி.சேகர் சென்னையில் ஜாலி ரவுண்டு