சட்டப்பேரவையில் இன்று திமுக உறுப்பினர் ஐ.பெரியசாமி 8 வழிச்சாலை மக்களுக்கு சோறு போடுமா என்று கேள்வி எழுப்பினார்.

Special Correspondent

இதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி "இத்திட்டத்தினால் சென்னை-சேலம் இடையே பயண நேரம் 2.15 நேரம் மட்டுமே இருக்கும், விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என சில கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கின்றனர். கையகப்படுத்தப்படும் 1,900 ஹெக்டேர் நிலத்தில் 400 ஹெக்டேர் அரசு நிலம் உள்ளது என்று தெரிவித்தார். பசுமை வழிச்சாலையில் 3 லட்சம் மரங்கள் நட திட்டமிடப்பட்டுள்ளது, வனப்பகுதியில் அமையும் சாலை, சுரங்க சாலையாக அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

எதிர்க்கட்சியினர் எதிர்ப்பை கைவிட்டுவிட்டு, ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளார். மேலும் போக்குவரத்து நெரிசல் குறையும், மக்கள் பயன்பெறுவர் என்றும் சம்பந்தப்பட்ட ஆட்சியர்கள் மூலம் நிலம் கையப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது என்று கூறினார்.

Special Correspondent

ஆனால் எதிர்கட்சி தலைவர் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் " 8 வழி பசுமைச்சாலை திட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகள் மிகப்பெரிய போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இத்திட்டத்தினால் 8 ஆயிரம் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்றும் தூத்துக்குடி போராட்டம் போல சேலத்திலும் ஏற்பட்டு விடக்கூடாது. எனவே மக்களின் கருத்தை கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டப்பேரவையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர் தமிழகத்தில் அரசை விமர்சிக்கும் ஊடகங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும் அரசுக்கு யார் ஜால்ரா போடுகிறார்களோ அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் சென்னை-சேலம் சாலைத்திட்டத்துக்கு தடையாகி விடுமோ என்ற அச்சத்தால் சேலம் போராட்டம் குறித்து தாம் பேசிய அனைத்தையும் நீக்க துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்தார் என்றும், இதனையடுத்து அவைக்குறிப்பில் இருந்து தாம் பேசியது நிக்கபட்டதால் எதிர்ப்பு தெரிவித்தும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, பசுமைவழிசாலை திட்டம் தொடர்பாக முதல்வர் பழனிசாமியின் பதிலுரையை ஏற்க மறுத்தும் சட்டப்பேரவையில் இருந்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

சமுக வலைதளத்திலும் விவசாய நிலங்களைஅழித்து 1 மணி நேரம் பயணம் குறைய 10000 கோடியை செலவு செய்வதற்கு பதிலாக நதிநீர் வாழ்வதாரம் உள்ளிட்ட பிரச்சனைககளுக்கு செலவு செய்லாம் என்று கூறி வருகின்றனர்.

தொடர் செய்திகள் : கடந்த ஓராண்டில் 50 ஆயிரம் சிறு, குறுந்தொழில்கள் மூடல்