பெங்களூரை சேர்ந்த வந்தனா தனது கணவர் ராஜேஷ் குமாரிடம் தன்னுடைய ஏ.டி.எம் கார்டை கொடுத்து 25,000 ரூபாய் எடுத்து வரும்படி கூறி இருக்கிறார். ராஜேஷ் பணம் எடுக்க முயன்ற போது பணம் வரவில்லை. ஆனால் வந்தனாவின் கணக்கில் இருந்து 25,000 ரூபாய் கழிந்திருக்கிறது.

Special Correspondent

இதனால் அவர்கள் வங்கி தரப்பை அணுகி உள்ளனர். அவர்களிடமிருந்து சரியான பதில் வரவில்லை. இது குறித்து அவர் சம்பந்தப்பட்ட வங்கியிடம் முறையிட்ட போது, கணவராக இருந்தாலும் ஏ.டி.எம் கார்டின் ரகசிய குறியீட்டு எண்ணை வந்தனா பகிர்ந்து கொண்டது விதி மீறல் என கூறி பணத்தை திருப்பியளிக்க SBI வங்கி மறுத்துவிட்டது.

அதன் பிறகு நுகர்வோர் நீதிமன்றத்தில் முறையிட்ட போது சிசிடிவி காட்சிகள் ராஜேஷிற்கு சாதகமாக இருந்தாலும், விதி மீறல் எனும் காரணத்தை கூறி நீதி மன்றமும் இந்த வழக்கை தள்ளுபடி செய்திருக்கிறது.

எனவே இனி உங்கள் ஏடிஎம் கார்டை பயன்படுத்துமாறு, உங்கள் நெருங்கிய உறவுகளிடம் கூட கொடுக்க வேண்டாம். பிறகு இதே போல ஏதாவது சம்பவம் நேர்ந்தால் உங்கள் பணம் திரும்ப கிடைக்காது என்ற அதிர்ச்சி செய்தி பலரும் சமூகவலை தளத்திலே பகிர்ந்து வருகின்றனர்.

தொடர் செய்திகள்