தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த மே 22ம் தேதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர்.
இதில் கலவரம் வெடித்ததை தொடர்ந்து போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 13பேர் உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயடைந்தவர்களையும், துப்பாக்கி சூட்டில் பலியானவர்களையும் தலைவர்களும், நடிகர்களும் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் விஜய் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் வீடுகளுக்கு நள்ளிரவில் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
தூத்துக்குடியில் ஸ்லோனின் ஜான்சி உள்ளிட்ட உயிரிழந்தவர்களின் வீட்டிற்கு நேரில் சென்ற விஜய் ஆறுதல் தெரிவித்து மட்டுமல்லாமல் தலா ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவியும் வழங்கினார்.
விஜய் தனியாக இரவில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் பைக்கில் சென்ற செய்தி அறிந்ததும் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது...
ஆன்மிகம் பேசும் ரஜினிகாந்த் கூட்டத்தை கூட்டி அர்ப்பாட்டமாக செய்த வேலையையும், ரஜினி கோபத்தில் சமூகவிரோதிகள் என்று பாதிககப்பட்ட மக்களை பார்த்து கத்திய நிலையில் விஜயின் அமைதியான அனுகுமுறையை பலரும் பாராட்டி சமூகவலைதளத்தில் எழுதி வருகின்றனர்.