2018ஆம் ஆண்டு நீட் தேர்வில் வினாக்கள் தவறாக மொழிப்பெயர்க்கப்பட்டு இருப்பதால் அதற்கு மதிப்பெண்கள் கேட்டு விண்ணப்பிப்பதற்காக மாணவி பிரதீபா எழுதிய கடிதம் கிடைத்துள்ளது.

Special Correspondent

பிரதீபா எழுதியுள்ள அந்த கடிதத்தில்,

2018 ஆண்டு மே 6 ஆம் தேதி நான் தமிழ்மொழியில் நீட் தேர்வு எழுதினேன். தமிழ் மொழியில் இருந்த வினாத்தாள் தவறாக மொழிபெயர்க்கப்பட்டு கேட்கப்பட்டிருப்பதால் அந்த வினாக்களுக்கு அதற்குரிய 4 மதிப்பெண்கள் வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவி பிரதீபா நேற்று இரவு விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். கூலித் தொழிலாளியின் மகளான பிரதீபா 12 ஆம் வகுப்பில் 1,125 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.

கடந்த ஆண்டு நீட் தேர்வில் 155 சதவீத மதிப்பெண்கள் எடுத்த பிரதீபாவுக்கு தனியார் மருத்துவக்கல்லூரியில் தான் சேருவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. தனியார் கல்லூரியில் சேரும் அளவிற்கு தனது பெற்றோர்களிடம் பணம் இல்லாத காரணத்தால் அப்போது மருத்துவ படிப்பில் சேரவில்லை.

தொடர்ந்து மனதைரியத்துடன் நீட் தேர்வுக்கான வகுப்புகளுக்கு சென்று இந்த ஆண்டு நீட் தேர்வை எழுதியுள்ளார். இந்நிலையில் நேற்று, வந்த நீட் தேர்வு முடிவில் அவர் 39 சதவீத மதிப்பெண்கள் மட்டுமே பெற முடிந்தது. அந்த விரக்தியில் மனமுடைந்த அவர் நேற்று இரவு தற்கொலை செய்துகொண்டார். நீட் தேர்வு தோல்வியால் மாணவி பிரதீபா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள பிரதீபாவின் உடலை உடற்கூராய்வு செய்து பெற்றுக்கொள்ள வேண்டும் என திருவண்ணாமலை எஸ்.பி. பொன்னி இன்று காலை பேச்சுவார்த்தை நடத்தினார்.

பேச்சுவார்த்தையின் போது உங்க பிரச்சனைகளை எல்லாம் உங்கள் மாவட்டத்தில் போய் வைத்துக்கொள்ளுங்கள் என்கிற ரீதியில் கருத்து கூறியதால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். இதனால் அதிரடியாக அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் 200 அதிரடி போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், செஞ்சி எம்.எல்.ஏ. மஸ்தான் அரசு மருத்துவமனைக்கு வந்தார். அவர் பிரதீபாவின் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதன் பின் மூன்று கோரிக்கைகளை வைத்தனர். நீட் தேர்வினை ரத்து செய்ய வேண்டும், 50 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும், பிரதீபாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன் வைத்தனர். உடனே அரசு மருத்துவமனைக்கு வந்த மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கையாக வைத்தனர். கோரிக்கையை நான் அரசுக்கு தெரியப்படுத்துகிறேன் என்று கூறிச்சென்றார் ஆட் சியர் கந்தசாமி.

இதற்கிடையில் வேலூர் மண்டல டிஐஜி வனிதா திருவண்ணாமலை வந்தார். அவர், செஞ்சி எம்.எல்.ஏ மஸ்தான், விசிகவினர், தினகரன் அணியின் முக்கிய நிர்வாகிகளிடம் போஸ்ட்மார்ட்டம் நடக்கட்டும், அதற்கு ஒத்துழைப்பு தாருங்கள் என்றார். எம்.எல்.ஏவோ, பிரதீபா தொடர்பாக சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளேன் ஆகையால் அதுவரை போஸ்ட் மார்டம் செய்ய அனுமதிக்க மாட்டோம் என்றனர். இதனை உடனடியாக மருத்துவமனை முன்வாயில் பூட்டப்பட்டது. உடனே அரசியல் கட்சியினர் அதிரடியாக அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு கூடி உள்ளது...

தொடரும் நீட் மரணங்கள்