நாடு முழுவதும் மே 6-ம் தேதி நடந்த நீட் நுழைவுத் தேர்வை 13 லட்சம் பேர் எழுதினார்கள். தமிழ், ஆங்கிலம், உட்பட மொத்தம் 11 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் 170 மையங்களில் 1,07,288 மாணவர்கள் நீட் தேர்வினை எழுதினார்கள். தமிழகத்திலிருந்து நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் சுமார் 5,398 பேர் தேர்வு எழுதவில்லை.
MBBS படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகளை நாடு முழுவதும் இணையதளத்தில் சிபிஎஸ்இ வெளியிட்டது. முன்னதாக நீட் தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தேர்வு முடிவுகளை முன்கூட்டியே வெளியிட்டது. மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான நீட் தேர்வு முடிவுகள் cbseneet.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்.
தமிழ் மொழியில் நீட் தேர்வை எழுத 24,726 பேர் விண்ணப்பத்திருந்தனர். அகில இந்திய அளவில் முதல் 50 இடங்களை பிடித்த மாணவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மாணவி கீர்த்தனாவை தவிர வேறு யாரும் தமிழக மாணவர்கள் இடம்பிடிக்கவில்லை.
தமிழகத்தில் இருந்து தேர்வு எழுதியவர்களில் 45,333 பேர் மட்டுமே நீட் தேர்வில் தகுதி பெற்றுள்ளனர்.
ஆனால் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 231 பேர் 1180க்கு மேல் தமிழ் நாட்டில் மதிப்பெண்கள் பெற்ற நிலையில் . 1180 மதிப்பெண்களுக்கு மேல் மாணவர்கள் 50 பேரும், மாணவிகள் 181 பேரும் பெற்றுள்ள நிலையில் .,தமிழகத்தை சேர்ந்த கீர்த்தனா மட்டுமே 676 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் 12-வது இடம் பெற்றுள்ளார். இவர் மட்டுமே முதல் 50 இடத்தில் ஒரு இடம் பெற்ற மாணவர் என்பதும் குறிப்பிடதக்கது.
பீகார் மாநிலத்தை சேர்ந்த கல்பனா குமாரி 691 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ரோகன் புரோகித் இரண்டாம் இடமும் பெற்றுள்ளனர். தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுதியவர்களில் 39.55% மட்டுமே நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
முன்னதாக தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டும் என சங்கல்ப் என்ற அமைப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
நீட் தேர்வில் கேட்கப்பட்ட 40 கேள்விகளில் பிழை உள்ளதால் தமிழில் தேர்வு எழுதிய மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர் என இத்தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ., எம்.பி.ரங்கராஜன் மதுரை ஐகோர்ட் கிளையில் மனுத்தாக்கல் செய்ததும் குறிப்பிடதக்கது...
மேலும் வாசிக்க : நீட் தேர்வில் கேட்கப்பட்ட 180 கேள்விகளில் 49 கேள்விகள் தவறானது : தொழில்நுட்ப நிபுணர் குற்றசாட்டு