இந்திய நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் போது, அதனுடன் சோ்த்து ஒவ்வொரு தனி நபரின் தாய் மொழி குறித்த புள்ளி விவரங்களும் சேகரிக்கப்படுகிறது.
இந்நிலையில் ஆய்வு ஒன்றில் சேகரிக்கப்பட்ட புள்ளி விவரங்களின் படி, நாட்டில் மொத்தம் 19,569 மொழிகள் தாய் மொழிகளாக பேசப்பட்டு வருவது தொிய வந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, நாட்டில் பேசப்படும் மொழிகளில் 22 மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும், இந்திய மக்கள் தொகையில் 96.71% மக்கள் இந்த 22 மொழிகளையே பயன்படுத்துவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் நமது நாட்டில் 10,000-க்கும் குறைவான மக்கள் உபயோகிக்கும் மொழிகளின் எண்ணிக்கை 121 என்றும், அதிகாரப்பூர்வ பட்டியலில் இல்லாத மொழிகள் 100-லிருந்து 1 குறைந்து 99 ஆக உள்ளது.
வேற்றுமையில் ஒற்றுமை என்ற கூற்றின் படி பல்வேறு இன, மத, மொழியினர் வாழும் நாடுகளில் இந்தியா மிக முக்கிய இடம் வகிக்கிறது.
சமஸ்கிர்தம் 22 மொழிகளில் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டு இருந்த போதிலும் ம அதனை வெறும் 14135 மக்களே பேசுகிறார்கள் என்பதும் குறிப்பிடதக்கது...
தொடர்பு செய்திகள் : தமிழ்மொழியை புறக்கணிக்கும் மத்திய பாஜக அரசு