தமிழ் நாட்டில் ஆண்ட எம்ஜியார் அரசு 1978இல் தமிழ்நாடு அரசு தற்போதுள்ள தமிழ் அரிச்சுவடியில் ணா, றா, னா, ணை, னை, லை, ளை, ணொ, ணோ, னொ, னோ, றொ, றோ அசைகளை அரிச்சுவடியை இலகுபடுத்தும் நோக்குடன் திருத்தியது. தமிழ்திருத்திய தமிழரிச்சுவடி அல்லது சீர்திருத்திய தமிழரிச்சுவடி என்பது தமிழ் அரிச்சுவடியின் ஏற்படுத்தப்பட்ட மாற்றமாகும்.

Special Correspondent

மேலும், முன்மொழியப்பட்ட திருத்தங்கள் 13 இல் 11 மட்டுமே வெற்றியளித்தது. முன்மொழியப்பட்ட அய் என்பதற்குப் பதில் ஐ மற்றும் முன்மொழியப்பட்ட அவ் என்பதற்குப் பதில் ஒள ஆகியவற்றை மக்கள் தொடர்ந்து பாவித்து வருவது தொடர்கிறது,

இதன் வரலாறு தரும் சுவாரிஸ்யம் மிகுத்து தொகுப்பு இதோ :

1930 காரைக்குடியில் இருந்து வெளிவந்த குமரன் இதழில் அதன் ஆசிரியர் முருகப்பா ணா, றா, னா, ணை, ளை, னை என்ற வரிவடிவங்களைப் பயன்படுத்தி ஒரு கட்டுரையை வெளியிட்டு வாசகர் கருத்தை வரவேற்றார்.

1933 திசம்பர் 23, 24 நாட்களில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நடந்த தமிழன்பர் மாநாட்டில் 15 வது தீர்மானமாக எழுத்துச் சீர்திருத்தத் தீர்மானம் நிறைவேறியது.

1933 -ல் தமிழ் வரிவடிவ ஆராய்ச்சி என்ற தலைப்பில் சிங்கப்பூர்த் தமிழ் அறிஞர் சு. சி. சுப்பையா “சிங்கப்பூர் முன்னேற்றம்” இதழில் தொடர் கட்டுரை எழுதினார்.

1948 பிப்ரவரி 14, 15 நாட்களில் சென்னையில் நடைபெற்ற “அகிலத் தமிழர் மாநாட்டில்” எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் எழுத்துச் சீர்திருத்தக் குழுவும் அமைக்கப்பட்டது.

Special Correspondent

இந்த இடைப்பட்ட காலத்தில் பெரியார் தன் பங்குக்கு முதல் அய், அவ், ணா, றா, னா, ணை, னை, லை, ளை, ணொ, ணோ, னொ, னோ, றொ, றோ என்ற எழுத்துக்களை குடியரசு இதழில் திருந்திய வரிவடிவத்தைப் புகுத்தித் தொடந்து குடியரசிலும், விடுதலையிலும் பயன்படுத்தினர். இது அன்றைய காலத்தில் பெரும் வரவேற்பு பெற்று காலப்போக்கில் மக்களால் பெரியார் எழுத்து என்று மக்களால் இன்று அளவும் பேசப்பட்டுவ வருகிறது...

1950 -ல் தி. சு. அவிநாசிலிங்கம் செட்டியார் கல்வி அமைச்சராக இருந்த பொழுது எழுத்துச் சீர்திருத்தக் குழுவை அமைத்தார். உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தின் சார்பில் நடந்த ஒவ்வொரு மாநாட்டிலும் எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் இடம் பெற்றன.

1975 பிப்ரவரித் திங்களில் தமிழகப் புலவர் குழு உயிர்மெய் உகர ஊகாரம் உட்பட எழுத்துச் சீர்திருத்த ஆய்வுத் தீர்மானம் நிறைவேற்றியது. (இப்பொழுது தமிழகப் புலவர் குழு சீர்திருத்தத்தை எதிர்க்கிறது. குழு உறுப்பினர்களில் எழுத்துச் சீரமைப்பை ஆதரிப்பவர்களும் உள்ளனர்)

1977 ஆம் ஆண்டு தி.மு.க தேர்தல் அறிக்கையில் அறிஞர் கருத்தறிந்து எல்லோரும் ஏற்கும் வகையில் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் செய்வதாக உறுதியளித்தது.

இதனை தத்தெடுத்த அதிமுகவின் எம்ஜிஆர் அரசு 1978-79 ல் பெரியார் நூற்றாண்டு விழாவையொட்டித் தமிழ்நாடு அரசு, முதற்கட்டமாகப் பெரியார் 1935 முதல் பயன்படுத்தி வந்த வரி வடிவத்தில் அய், அவ் தவிர மற்றவற்றைச் செயற்படுத்தியது.

1983 ல் சிங்கப்பூர் அரசு இச்சீர்திருத்தத்தை ஏற்றது. 1984 தைத் திங்கள் முதல் செயற்படுத்தியது.

குறிப்புக்கள்

“South Asian scripts”. pp. 35–36. பார்த்த நாள்: 31 December 2011.

Mello, Fernando. “Evolution of Tamil typedesign”. Evolution of Tamil typedesign. பார்த்த நாள்: 31 December 2011.

உங்கள் அறிவுறுத்தல் மற்றும் பின்னுட்டம் எங்களுக்கு மிகவும் பயன் தரத்தக்கது . நாங்கள் சரியாக / நியாமாக ஒரு விஷயத்தில் இரு பக்கமும் செய்தியை முக்கியத்துவம் தருகிறோமோ என்று எங்களை தொடர்ந்து கண்காணித்து வழிநடத்த வேண்டுகிறோம் .. நன்றி - ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் - ஸ்பெல்க்கோ மீடியா ஆசிரியர் குழு