ஆளும் பிஜேபி மற்றும் அதிமுக அமைச்சர்கள் நீட் தொடர்பாக கொடுத்த வாக்குறுதிகள் விவரம்:
மத்திய வர்த்தக துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்
நீட் தேர்வு விலக்கு குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க பிரதமர் மோடி அலுவலகத்தால் நியமிக்கப்பட்ட மத்திய தொழில்துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் திடீரென்று, “நீட்டிலிருந்து தமிழகத்துக்கு ஓராண்டு விலக்கு அளிக்க மத்திய அரசு ஒத்துழைப்பு தரும்“என்று அறிக்கை விட்டார்.
கேபினட் பொறுப்பில் உள்ள பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை
மத்திய அரசிடம் ஓராண்டு விலக்கு கேட்கவில்லை. நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு கேட்டே ஆலோசித்து வருகிறோம். நல்லதே நடக்கும் இதனை மத்திய அரசு பரிசீலிப்பதாக கூறியிருக்கிறது. அதனால்தான், மருத்துவ மாணவர்களுக்கான கவுன்சிலிங் தொடங்கப்படாமல் உள்ளது. தொடர்ந்து, முயற்சி செய்து வருவதால் நல்லதே நடக்கும்” என்று பேட்டி அளித்தார்
பிஜேபி மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்
“தமிழக பள்ளிகளில் தகுதி நிறைந்த கல்வி கற்பிக்கப்படாத நிலை உள்ளது. அதனால், நீட் தேர்வுக்கு கால அவகாசம் கேட்கும் தமிழக அரசின் கோரிக்கை கவனத்தில் கொள்ளவேண்டும். கிராமப்புற மாணவர்களுக்கும் மருத்துவப்படிப்பில் வாய்ப்பு தரவேண்டும் என்று மத்திய அரசு நினைக்கிறது. எனவே, நீட் தேர்வில் ஓராண்டு விலக்கு அளிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. விரைவில் நல்ல முடிவு வரும் என்ற நம்பிக்கை உள்ளது” என்று உறுதி அளித்த சிரித்த படியே சென்றார்.
மோடி அரசின் சட்டத்துறை நியமித்த அட்டர்னி ஜெனரல்
தமிழகத்துக்கு ‘நீட்’ லிருந்து ஓராண்டுக்கு விலக்கு அளிக்கக் கோரும் அவசர சட்ட வரைவு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட உள்துறை அமைச்சகமும் ஏற்றது. சட்டம், சுகாதாரத்துறை மற்றும் மனித வள மேம்பாட்டுத் துறைகளுக்கும் இந்த அவசர சட்ட வரைவு அனுப்பி வைக்கப்பட்டது. வரைவு குறித்து தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தியது. தமிழக அரசின் சட்ட வரைவை ஆய்வு செய்து வருவதாக வேணுகோபால் தெரிவித்திருந்தார்.
இதனால், தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து ஓராண்டுக்கு விலக்கு அளிக்கலாம் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்துக்கும், உள்துறை அமைச்சகத்துக்கும் தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் அனுப்பியுள்ளார். ஆகவே, நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும் தமிழக அரசின் அவசர சட்டம் தொடர்பாக உடனடியாக முடிவு எடுக்கப்படும் தமிழக சுகாதாரத்துறை நிலையில் இறுதியில் அட்டர்னி ஜெனரல் தமிழகத்திற்கு மற்றும் தனியாக நீட் விலக்கு தரமுடியாது என்று 180 டிகிரி அந்தர் பல்டி அடித்தார் இதனை ஏற்று கொண்ட உச்சநீதிமன்றம் தீர்ப்பை மத்திய அரசுக்கு சாதமாக வழங்கியது.
முன்னாள் நிதி மந்திரி மனைவி நளினி சிதம்பரம்
நீட் தேர்வின் அடிப்படையில் மாணவர்ச்சேர்க்கை நடத்தவேண்டும் என்ற மாணவர்களின் சார்பாக வழக்கு தொடுத்த வழக்கறிஞர் நளினி சிதம்பரமோ,“நீட்தேர்வுக்கு விலக்களிக்கும் தமிழக அரசின் அவசரச் சட்டம்அரசியல் சாசன சட்டப்படி செல்லாது என்பது ஏற்கனவே தெரிந்ததுதான். ஒரு மாநிலத்திற்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது என மத்திய அரசே தெரிவித்துவிட்டதால், எங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க உச்சநீதிமன்றம் அனுமதிக்கவில்லை. நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்குவேண்டுமானால், தமிழகம் இனி கடவுளிடம்தான் மேல்முறையீடு செய்ய முடியும். ” என்றார்.
உச்சநீதிமன்றம் போட்ட யூ டர்ன்
நீட் தேர்வு எழுதி காத்திருப்போர் மற்றும் மாநில திட்டத்தில் காத்து இருப்போர் யாரும் பாதிக்கப்பட கூடாது அதனால் ப்ளஸ்டூ மதிப்பெண் அடிப்படையிலும் நீட் தேர்வின் அடிப்படையிலும் இரண்டு பட்டியலை தயாரியங்கள் என்று சொன்ன நீதிமன்றம் மத்திய அரசின் நீட் விலக்கு கொடுக்க முடியாது என்ற வாதத்தை அப்படியே ஏற்று கொண்டு நீட் தேர்வை மட்டுமே நீடித்து விட்டது.
இப்படி அனைவரும் மாற்றி மாற்றி நம்பிக்கை கொடுத்து தமிழ்நாட்டின் மாணவர்களின் மருத்துவ கனவை கேள்வி குறியாக்கி விட்ட்டார்கள் . திமுக முன்னாள் எம்எல்ஏ மற்றும் அரியலூர் மாவட்ட திமுக மாவட்ட செயலாளர் தொலைகாட்சி விவாதத்தில் சென்னை ஒரு பள்ளியில் மட்டுமே 33 மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரி இடம் கிடைத்ததாகவும் , வருடம் தோறும் சுமார் 15 மாணவ மாணவிகள் மருத்துவ கல்லூரில் தேர்வாகும் தனது மிகவும் பிற்பட்ட பகுதியில் இந்த வருடம் ஒருவர் கூட தேர்ச்சி பெற வில்லை என்று வருத்தத்துடன் கூறிப்பிட்டுள்ளார்.
உங்கள் அறிவுறுத்தல் மற்றும் பின்னுட்டம் எங்களுக்கு மிகவும் பயன் தரத்தக்கது . நாங்கள் சரியாக / நியாமாக ஒரு விஷயத்தில் இரு பக்கமும் செய்தியை முக்கியத்துவம் தருகிறோமோ என்று எங்களை தொடர்ந்து கண்காணித்து வழிநடத்த வேண்டுகிறோம் .. நன்றி - ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் - ஸ்பெல்க்கோ மீடியா ஆசிரியர் குழு
பின்னுட்டம்
(பின்னுட்டம் தொழில் நுட்ப ஆய்வுக்காக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது...)
பின்னுட்டம் இடுக