திருச்சியில் பொதுப் பணித்துறை தலைமை பொறியாளரிடம் அனைத்து விவசாயிகள் சங்கத்தினர் மனு அளித்தனர். பின்னர் பேசிய அனைத்து விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், குறுகிய நாட்களில் அதிக கனஅடி அளவு தண்ணீர் திறந்தால் விவசாயம் செய்ய முடியும் என்றார்

Special Correspondent

விவசாயத்திற்கு முக்கியத்துவம் தராமல் மகாமகம், மகாபுஷ்கரம் என்ற பெயரில் தண்ணீர் வீணடிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

காவிரி வழயில் உள்ள கால்வாய்கள் தூர்வாரப்படாததால் தண்ணீர் கடைமடை பகுதிகளுக்கு செல்ல முடியாமல் சம்பா மற்றும் குறுவை சாகுபடிகள் பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளனர் விவசாயிகள். எனவே அக்டோபர் 1 - 15 வரை 25,000 கனஅடி நீர்திறக்க அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

.

ஆறுகள் உள்ளிட்ட அனைத்து பாசன கட்டமைப்புகளும் பழுதடைந்துள்ளது. திறந்து விடப்படுகிற தண்ணீர் விளைநிலங்களுக்கு செல்ல முடியாத வகையில் ஆறுகள் சீர்கெட்டு கிடக்கிறது.

மகாபுஷ்கரம் செப்-12 முதல் 24-ஆம் தேதி வரை நடைபெற்ற போது தேவை இல்லாமல் தண்ணீர் செலவித்து முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் நீராடியதை கண்டித்த விவசாயிகள் இந்த ஆண்டு இருக்கிற தண்ணீரை கொண்டு விவசாயிகள் சிக்கனமாக சாகுபடியை துவக்கும் வகையில், விரைந்து குறைந்த நாட்களில் அதிக அளவு தண்ணீர் திறக்க கோரினார்.