விவேக் கவுல் பொருளியல் வல்லுநர் மோதியின் demonetisation ரொக்க சூதாட்டம் படு தோல்வியில் முடிந்ததாக பிபிசி யில் எழுதி உள்ளார் அதன் விவரம் இதோ :
கள்ள நோட்டுகளையும், கணக்கில் வராத பணத்தை வைத்திருப்போர் வங்கியில் அதைச் செலுத்த மாட்டார்கள், அதனால் சட்டவிரோதப் பணம் பெருமளவில் ஒழியும் என்பதே அரசின் நம்பிக்கை.
ஏப்ரல் 2016 முதல் மார்ச் 2017 வரையில் கண்டுபிடிக்கப்பட்ட 500 ரூபாய், 1000 ரூபாய் கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை 5,73,891 என்கிறது ரிசர்வ் வங்கி புள்ளிவிவரம்.
முந்தைய ஆண்டில் பணநீக்க நடவடிக்கை ஏதும் இல்லாமலே கண்டுபிடிக்கப்பட்ட 500 ரூபாய், 1000 ரூபாய் கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை 4,04,794.
கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மோடி அரசு அறிவித்தது. இப்படி செல்லாததாக ஆக்கப்பட்ட பணத்தின் மொத்த மதிப்பு 15.44 லட்சம் கோடி ரூபாய்
இதற்கு மாறாக, ஜூன் 30 வரை 15.28 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் வைப்பாகச் செலுத்தப்பட்டதாக ரிசர்வ் வங்கி அறிக்கை கூறுகிறது.
இதன்படி மதிப்பு நீக்கப்பட்ட நோட்டுகளில் சுமார் 99 சதவீதம் வங்கிக்குத் திரும்பி வந்துள்ளது. எனவே, கிட்டத்தட்ட ரொக்கமாக இருந்த கருப்புப் பணம் முழுவதும் வங்கிக்கு வந்துவிட்டது. உண்மையில் அரசு நினைத்தபடி கருப்பு பணமும் கள்ள பணமும் ஒழியவில்லை .
மாறாக அமைப்புசாரா துறைகளைச் சேர்ந்த 2.5 லட்சம் தொழில் அலகுகள் மூடப்பட்டதாகவும்,
ரியல் எஸ்டேட் துறை பெரிதும் பாதிக்கப்பட்டதாகவும், பெரும் எண்ணிக்கையிலான மக்கள் தங்கள் வேலையை இழந்ததாகவும் பாஜகவின் தொழிற்சங்கப் பிரிவான பாரதீய மஸ்தூர் சங்கமே ஒப்புக்கொண்டுள்ளது.
பரவலாக ரொக்கத்திலேயே கொடுக்கல் வாங்கல் நடக்கும் வேளாண்மைப் பொருளாதாரமும் பெரிய அளவில் அடி வாங்கியது.
விவசாயிகள் விளைவித்த பருப்பு, காய்கறிகளுக்கு போதிய அளவில் விலை கிடைக்காமல் போனது. பல விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். பல மாநில அரசுகள் வேளாண் கடன்களைத் தள்ளுபடி செய்தன.
இதில் நகைச்சுவை என்னவென்றால், ரொக்கமாக எவ்வளவு கருப்புப் பணம் இருக்கிறது என்பதைப் பற்றி அரசிடம் புள்ளிவிவரம் ஏதும் இல்லை. 2016 டிசம்பர் 16 அன்று நாடாளுமன்றத்தில் எழுத்துமூலம் அளித்த பதிலில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி இதைத் தெரிவித்தார்.