அய்யா உங்களுக்கிட்டெல்லாம் பெரிய மன்னிப்பு கேட்கிறேன். மன்னித்துவிடுங்கள். நாங்கள் பல செய்திகளை நீங்கள் நம்ப வேண்டும் என்னு சொல்லியிருப்போம். அம்மா இட்லி சாப்பிட்டாங்க, சட்னி சாப்பிட்டாங்கன்னு சொல்லியிருப்போம். ஆனால் உண்மையிலேயே நாங்கள் யாரும் அம்மாவை பார்க்கவில்லை. இதுதான் உண்மை. அவன் பார்த்தான், இவன் பார்த்தான் என சொன்னதெல்லாம் பொய் என மதுரை பழங்காநத்தத்தில் 22.09.2017 நடந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.
இந்த நிலையில் இன்று சென்னை கீழ்ப்பாக்கத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவு அமைச்சர் செல்லூர் ராஜு, ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, தான் உள்பட அனைத்து அமைச்சர்களும் பார்த்ததாக தெரிவித்துள்ளார். தாயை இழந்த துக்கத்தில் இருக்கும் தன்னால், அவரது மரணம் குறித்து விமர்சிக்க முடியாது என்றார். ஜெயலலிதா மரணம் குறித்து, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறிய கருத்துக்கு அவரிடமே பதில் கேட்குமாறும் செல்லூர் ராஜு தெரிவித்தார்.
இந்த நிலையில், வேலூர் சோளிங்கரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய கே.சி.வீரமணி, ஜெயலலிதா குணமாகி வந்ததும் தங்களை பற்றி தவறாக கூறுவார் என்று சசிகலாவுக்கு பயந்தே, தாங்கள் பொய் கூறியதாக தெரிவித்துள்ளார்.
இப்படி மந்திரிகளும் மாற்றி மாற்றி பேசி வரும் வேளையில் ., ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக் முதல் மூன்று நாள் மட்டுமே தனது அத்தை சுயநினைவுடன் இருந்தாக கூறியதும்...
தினகரன் தனது சித்தியை(சசிகலா ) ஆக்ட் 1 2016 ஆம் தேதி மேல ஜெயலலிதாவை பார்க்க விடவில்லை என்று கூறியதும்,
தொடந்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் :ஓ.பன்னீர்செல்வத்துக்கு முதல்வர் இலாகாவை கவனிக்க ஆளுநருக்கு அறிவுரை வழங்க ஜெயலலிதா ஆக்ட் 8 2016 கையெழுத்து போட்டது, எப்படி? தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் 2016 அக்டோபர் 28 -ஆம் தேதி ஜெயலலிதாவின் இடது கை பெருவிரல் ரேகை பதியப்பட்டிருந்தது. ஆக சுயநினைவின்றி இருந்த ஜெயலலிதாவிடம் கைரேகை பெற்றது எப்படி ? என்பது தொடர்பாக உடனே சிபிஐ விசாரணை தேவை என மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.