ஜெயலலிதா உடல்நலம் தேற, கடந்த 2016 அக்டோபர் 3ல் பள்ளிக்குழுந்தைகள் 20 பேரை, ஆர்கே நகர் முதல் தண்டையார்ப்பேட்டை வரை அழைத்து சென்றதாக புகார் அளிக்கப்பட்டது.
இது குறித்து 7 நவம்பர் 2016 அன்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் சென்னை மாநகர ஆணையரிடமிருந்து அறிக்கை கேட்டுள்ளது. சம்பவ இடத்தில் இருந்த காவல்துறை அதிகாரிகள் மீது என்ன ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் ஆணையம் கேட்டுள்ளது.
இதற்கு பதிலளித்த முன்னாள் ஆணையர் ஜார்ஜ் “அந்த சம்பவத்தில் பங்கேற்ற குழந்தைகள் அனைத்தும், தங்கள் பெற்றோர்களின் சம்மதத்தோடுதான் பங்கேற்றனர் என்றும், அன்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட காவல் துறையினர் அனைவருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், இனி இது போன்ற சம்பவங்கள் நடைபெறாது என்றும் பதிலளித்துள்ளார்.
தேசிய மனித உரிமைகள் ஆணையம், இது போன்ற காட்டுமிராண்டித்தனமான நிகழ்வுகளுக்கு பெற்றோரின் சம்மதமோ அந்த குழந்தைகளின சம்மதமோ எப்படி சரியாக இருக்கும் என்றும்..
குழந்தைகளின் கன்னத்தில் இரண்டு மீட்டர் நீளமுள்ள இரும்புக் கம்பியை சொருகுவதற்கு யார் சம்மதம் தர முடியும் என்றும் கேட்டுள்ளது.
சம்பவத்தின் தீவிரத்தை பார்க்கையில், அந்த இடத்தில் இருந்த காவல்துறை அதிகாரிகளுக்கு வெறும் எச்சரிக்கை எப்படி உரிய தண்டனையாக முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.
முன்னாள் காவல் துறை ஜார்ஜ் ஆணையாளர் பதிலால் கடுப்புற்ற தேசிய மனித உரிமைகள் ஆணையம், 4 வாரத்திற்குள் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
போதை பொருள் குட்கா ஊழலில் பல கோடிகளில் திமுக குற்றசாட்டிய முக்கியமான நபர் ஜார்ஜ் என்பதும் ., மெரினா மாணவர்கள் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் போலீசாரே தீ வைத்து கலவரம் உண்டாக்கி மாணவர்களை லத்தி சார்ஜ் செய்தவர் என்று அப்போது பெருவாரியான மாணவர்கள் அன்றைய போலீஸ் மீது குற்றம் வைத்தது குறிப்பிட தக்கது.