நெடுவாசல் கதிராமங்கலம் டெல்லி விவசாயி போராட்டங்கள் 150 நாளுக்கு மேல் சென்ற நிலையில், புதிய பிரச்சனையாக பல இடங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
திண்டுக்கல்லில் அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று முழுவதும் மின்சாரம் இல்லை. இதனால் கொசுக்கடியில் கடுமையாக பாதிக்கப்பட்டதாக நோயாளிகள் வேதனை தெரிவித்தனர். ஜெனரேட்டர் வசதி செய்யாததற்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் மின்சாரம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவும் அவர்கள் கோரியுள்ளனர்.
இது போன்ற ஜெனரேட்டர் இயங்கா நிலை தொடர்ந்தால் பிஜேபி ஆளும் உத்திர பிரதேசம் போல இங்கும் குழந்தைகள் மரணம் ஏற்படும் என்பதால் போராட்டம் பரவும் நிலை வருமென எச்சரிக்கை செய்தனர்.
தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த ஆரணியில், இரவு நேரங்களில் மின்வெட்டு ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அறிவிக்கப்படாத மின்வெட்டை கண்டித்தும், சீரான தடையில்லா மின்சாரம் வழங்க கோரியும் நேற்றிரவு திடீரென மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை சமரசம் செய்தனர். மேலும் அதிகாரிகளிடம் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தனர். இதனையைடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.
தமிழக அமைச்சர்களே ஜெயலலிதா மரணத்தில் மர்ம பிரச்சனை பேசியதால் வந்த சர்ச்சையில் அரசு நிர்வாகம் முற்றிலும் முடங்கி போய் உள்ளதாக அரசியல் நோக்கர்கள், கருத்து தெரிவித்தனர்.