சசிகலா குடும்பத்தார் கூறியதை கேட்டு ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பொய்யான தகவல்களை கூறியதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஒப்புக்கொண்டது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் ஜெயலலிதா இட்லி சாப்பிட்டதாக தாங்கள் கூறியது பொய் தான் என திண்டுக்கல் சீனிவாசன் மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
சசிகலா குடும்பத்துக்கு கட்டுப்பட்டு பொய்யான தகவலை தெரிவித்ததாக அமைச்சர் கூறியது உண்மை என்றால் ஜெயலலிதா உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக ஆளுநர் வித்யாசாகர் ராவ் கூறியது உண்மையா, பொய்யா என்ற கேள்வி எழுந்துள்ளது.
2-வது முறையாக அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று திரும்பிய ஆளுநர் ஜெயலலிதா கட்டை விரலை உயரத்தி காட்டுவதாக அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இதே போல் ஜெயலலிதா குணமடைந்துவிட்டதாகவும், வீடு திரும்பும் தேதியை அவரே முடிவு செய்வார் என்றும் அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி கூறியிருந்தார்.
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஒப்புதலால் ஏற்கனவே ஜெயலலிதா உடல்நிலை குறித்து ஆளுநர், அப்பல்லோ தலைவர், அதிமுக பிரமுகர்கள் உரிய கருத்துகளின் உண்மை தன்மை சந்தேகத்துக்குள்ளாக்கி உள்ளது.
தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் என்ன செய்தார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஜெயலலிதா மரணமடைந்து ஓராண்டு ஆக போகும் நிலையில் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த சர்ச்சை விஸ்வரூபம் எடுத்துள்ளதால் அல்லது நீதி விசாரணையை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் உடனடியாக சிபிஐ விசாரணையை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்த நிலையில் பாமக நிறுவனர் தலைவர் அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரியுள்ளார்