ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக வார்னர் மற்றும் ஆரோன் பிஞ்ச் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் இந்திய பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்டனர். இறுதியில் ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 293 ரன்கள் எடுத்தது.
ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக பின்ச் 124, ஸ்மித் 63, வார்னர் 42 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய பும்ரா, குல்தீப் தலா 2 விக்கெட்டுகளையும் பாண்டியா, சஹால் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
இதனையடுத்து 294 ரன்கள் எடுத்தால் என்ற வெற்றி இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் ரஹானே இருவரும் ஆஸ்திரேலியா பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டர்.
முதல் விக்கெட்டுக்கு 139 ரன்கள் சேர்த்தனர். இறுதியில் பாண்டியாவின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 47.5 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 294 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 71, ரஹானே 70, பாண்டியா 78 ரன்கள் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 3-0 என கைப்பற்றியுள்ளது. இன்றைய ஆட்டத்தின் சிறந்த விளையாட்டு வீரராக ஹர்டிக் பாண்டியா தேர்ந்து எடுக்கப்பட்டார் .
இந்த வெற்றியின் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டி தரவரிசையில் இந்திய அணி முதல் இடம் பிடித்துள்ளது.
AUS 293/6 (50.0 Ovs)
IND 294/5 (47.5 Ovs)