நீட் விஷயத்தில் மாணவி அனிதா 1176 / 1200 மார்க் எடுத்தும் உயிர் இழந்த சம்பவம் தொடர்பாக பல இடத்தில் போராட்டம் வெடித்த நிலையில் இந்த வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் மாநில அதிமுக அரசை கடுமையாக சாடியுள்ளது...
ஆகஸ்ட் மாதம் உத்தரவு பிறப்பித்தும் குழு அமைப்பதில் தாமதம் ஏன் என்றும், வல்லுனர்களை கண்டறிந்து குழு அமைக்க ஒரு மணி நேரம் போதாதா? என்று நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பினார்.
அரசு காலம் தாழ்த்தியதால் தான் ஒரு உயிரை இழந்துள்ளோம் என்று நீதிபதி வருத்தத்துடன் தெரிவித்தார். நீட் பயிற்சி மையங்கள், ஆலோசனை குழு தொடர்பாக 6-ம் தேதிக்குள் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.
மக்களை நம்ப வைத்து அரசு ஏமாற்றி விட்டதாகவும், நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் நீட் தேர்வு தொடர்பாக ஊடகங்களிடம் பேச கூடாது என்று அமைச்சர்களுக்கு கூறி இனியும் மாணவர்களை நம்ப வைத்து ஏமாற்ற கூடாது என்றும் அரசுக்கு நீதிபதி கருபாகரன் அறிவுரை வழங்கினார்.
மத்திய பிஜேபி அரசின் முடிவுக்கு ஏற்ப நீட் எதிர்க்காமல் ., மௌனனமாக நீட் நடத்தும் முறைக்கு ஏற்ப நீதிமன்றமும் அரசும் நீட் தேர்வை மாணவர்கள் ஏற்று கொள்ள வசதியாக மேலும் முறைப்படுத்தும் முயற்சியாக இன்றைய நீதிமன்றம் நடவடிக்கை திகழ்வதாக அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்தனர்.