விஜய் சில தினங்களுக்கு முன்னர் தான் மெர்சல் படத்தின் படப்பிடிப்பு முடித்துவிட்டு பார்சிலோ கிளம்பி சென்றார் . இப்படத்தின் டீசர் அட்லீயின் பிறந்த நாளையொட்டி இன்று (செப்., 21) மாலை சரியாக 6மணிக்கு வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட ஒரு மணி நேரத்தில் மெர்சல் டீசர் இந்திய அளவில் டிரென்ட்டிங்கிற்கு வந்துள்ளது.

Special Correspondent

தெறி படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் - அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள படம் மெர்சல்.

விஜய் மூன்று வேடங்களில் நடிப்பதாக சொல்லப்படும் இப்படத்தில் விஜய்யுடன் சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். தேனாண்டாள் பிலிம்ஸின் 100வது படமாக இப்படம் பிரமாண்டமாக தயாராகியுள்ளது.

"நீ பற்றி வைத்த நெருப்பு ஒன்று பற்றி எறிய உன்னை கேட்கும். நீ விதை வினையெல்லாம் உன்னை அறுக்க காத்திருக்கும்..." என்ற வசனத்துடன் விஜய்யின் மெர்சல் டீசர் தொடங்குகிறது.

சுமார் 1.15 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த டீசரில், கிராமத்து விஜய், காளையுடன் விஜய் இருப்பது, மேஜிக்மேன் விஜய் என டீசர் முழுக்க முழுக்க அவர் தான் தோன்றுகிறார்கள். கூடவே விஜய்யின் அதிரடி சண்டைக்காட்சிகள், நடனங்கள் இடம் பெற்றுள்ளன.

டீசர் வெளியிடப்பட்ட ஒரு மணிநேரத்தில் மெர்சல் டீசருக்கு 4.8 லட்சம் பார்வையாளர்களும், 4 லட்சம் லைக்குகளும், 80 ஆயிரம் டிஸ்லைக்குகளும் பெற்றுள்ளன. குறுகிய காலத்தில் இவ்வளவு லட்சம் லைக்குகள் பெற்ற டீசர் விஜய்யின் மெர்சல் தான்.

சமீபத்தில் அஜித்தின் விவேகம் டீசர் அதிக லைக்குகள் பெற்று உலக சாதனை படைத்தது. அதை முறியடித்து மெர்சல் டீசர் இந்திய அளவில் டிரென்ட்டிங்கில் உள்ளது.
https://www.youtube.com/watch?v=gQDo5QuZTaw