இயற்கை வளம், பெரும்பள்ளம் ஓடை பாதுகாப்பு அமைப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட் நீதிபதிகள் :
இயற்கை வழங்கிய கொடையை நாம் பாதுகாத்தால் தான், இயற்கை நம்மை பாதுகாக்கும் என்றும் ., எதிர்கால சந்ததியைக் கருத்தில் கொண்டு நீர்நிலை பாதுகாப்புக்குழு அமைக்க வேண்டும் என்றும்,
நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ., மேலும் நீர் நிலை பற்றிய விவரங்களை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
தருமபுரி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், தஞ்சை,நெல்லை திருவாரூர், விழுப்புரம், கரூர், நாமக்கல், பெரம்பலூர். புதுக்கோட்டை ஆட்சியருக்கு நீர்நிலைகள் வழக்கு விசாரணை குறித்து 13 மாவட்ட ஆட்சியர் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் நீர் நிலை ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடர்பாக அறிக்கை அளிக்காத 13 மாவட்ட கலெக்டர்கள், அக்.,12ல் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை விரைந்து அகற்றவும், புகார்கள் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்யவும் என்றும், மேலும் நீர்நிலை ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்குகளில் கீழமை நீதிமன்றங்கள் தலையிடக் கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டது.