சச்சாதாந்த் ஹரி சாக்ஷி மகாராஜ் பாரதீய ஜனதா கட்சியின் இந்திய அரசியல் மற்றும் மதத் தலைவர். உத்தரபிரதேச மாநிலம் உன்னோவிலிருந்து 2014 பொதுத் தேர்தலில் அவர் வெற்றி பெற்றார்.
1991 ம் ஆண்டு மருதூரா, 1996 மற்றும் 1998 ஆகிய ஆண்டுகளில் அவர் ஃபுருகாபாத்தில் இருந்து இந்திய பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றார். 2000 முதல் 2006 வரை அவர் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.
சாக்ஷி மஹாராஜ் குழுவின் பதாகையின் கீழ் இந்தியா முழுவதும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆசிரமங்களை இயக்கி அவர் தற்போது தந்த இயக்குநராகவும் பணியாற்றி வருகிறார்.
பொது இடங்களில் கட்டிப்பிடித்து காதலை வெளிப்படுத்தும் காதலர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று பாஜக எம்பி சாக்ஷி மகாராஜ் செய்தியாளர்களிடம் ஆவேசமாக கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இரு சக்கர வாகனம், கார், பூங்கா ஆகிய இடங்களில் காதலர்கள் கட்டிப்பிடித்து ஒருவரை ஒருவர் விழுங்குவது போல் பார்த்துக் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார். ஏதேனும் தவறு நடக்கும் முன்பாக அந்த ஜோடிகளை கைது செய்ய வேண்டும் என்றும் சிறையில் சிறையில் அடைக்க வேண்டியது அவசியம் என்றார்.
மேலும் பொது இடங்களில் கட்டிப்பிடிக்கும் காதல் ஜோடிகளை பொதுமக்கள் பார்க்க மறுப்பதாக குறைகூறிய அவர் பாலியல் பலாத்காரம் நடந்தால் மட்டும் போலீசாரை குற்றம் சொல்வதாகவும் சாக்ஷி மகாராஜ் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கற்பழிப்பு வழக்கில் குற்றவாளி என மதகுரு குர்மீத் ராம் ரகீம் சிங் மீது சி.பி.ஐ. தனி கோர்ட் வழங்கிய தீர்ப்பு தொடர்ந்து மேற்பட்ட 120 மேற்பட்ட பேர் படுகொலை வன்முறை ஏற்பட்ட போது இவர் தெரிவித்த கருத்தும் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
அதில் "குர்மீத் ராம் ரகீம் சிங் கோடிக்கணக்கான மக்களால் போற்றப்படுபவர். அவர் மதிக்கத்தக்க ஆன்மா. இந்திய கலாசாரம் மற்றும் மத தலைவர்களை இழிவுபடுத்தும் சதிவேலை நடக்கிறது. தற்போது நடைபெறும் வன்முறைக்கு கோர்ட்டே பொறுப்பேற்க வேண்டும் " என கூறியிருக்கிறார்.
கற்பழிப்பு சாமியாரை ஆதரித்து இதே கருத்தை பிஜேபி எம்பி சுப்ரமணிசாமியும் கூறியது குறிப்பிடத்தக்கது...