நோட்டீஸுக்கு பொய்யான விளக்கம் கூறியதால் எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார்.

Special Correspondent

முதல்வராக பழனிசாமி நீடிக்க வேண்டும் என்ற கட்சியின் முடிவில் எம்.எல்.ஏ.க்களுக்கு உடன்பாடில்லை என்று தெரிவித்தார். மேலும் முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்பது பெரும்பாலான எம்.எல்.ஏ.களின் கருத்து கிடையாது.

முதலமைச்சர் அழைத்தும் எம்.எல்.ஏ.கள் கூட்டத்தில் 18 எம்.எல்.ஏ.களும் பங்கேற்கவில்லை என்று கூறினார்.

மேலும் ஜக்கையன் அளித்த புகாரே 18 எம்.எல்.ஏ.க்குள் தகுதி நீக்கம் செய்ய முகாந்திரமாக இருந்தது. சொந்த கட்சிக்கு எதிராக செயல்பட்டதும், தி.மு.க.,வுடன் சேர்ந்து ஆட்சியை கவிழ்க்க சதி நடப்பதாகவும், தனக்கு தெரியவந்ததால், தினகரன் அணியில் இருந்து வெளிவந்து முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவு அளித்ததாகவும், அதிமுக ஆட்சியை கவிழ்க்க தாம் ஒரு கருவியாக பயன்படுத்தப்பட்டதாகவும், என்னிடம் ஜக்கையன் தெரிவித்தார். இந்த புகாரின் அடைப்படையில் 18 எம்.எல்.ஏ.,க்களையும் தகுதி நீக்கம் செய்ததாக தனபால் கூறினார்.

நீக்கம் செய்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரில் சாத்தூர் எம்.எல்.ஏ. சுப்பிரமணியனும் ஒருவர். சாத்தூர் ஆர்.டி.ஓவும் தாசில்தாரும், சாத்தூர் எம்.எல்.ஏ. அலுவலகத்தைப் பூட்டி சீல் வைத்தனர். அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருக்கிறது..

நீக்கம் செய்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரில் அமைச்சராக இருந்த போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக ரூ.4.25 கோடி அளவிற்கு லஞ்சம் பெற்றதாக செந்தில் பாலாஜி மீது புகார் உள்ளது. போக்குவரத்து துறை உதவி மேலாளரும் செந்தில் பாலாஜி ரூ.1.17 கோடி மோசடி செய்ததாக புகார் கூறி உள்ளார்.

இந்த 2 மோசடி புகார்கள் மீது செந்தில் பாலாஜியை கைது செய்வதற்காக மத்திய குற்றப்பிரிவு போலீசார் குடகு விரைந்துள்ளதாக கூறப்படுகிறது.

பதவியில் இருக்கும் முதல்வரோ, துணை முதல்வரோ எத்தனை காலத்திற்கு பேசாமல் இருப்பார்கள். இப்ப எடுத்த நடவடிக்கையில் என்ன தவறு இருக்கிறது.மக்களின் வரிப்பணத்தில் கூத்தடிப்பதா.. தகுதி நீக்கம் சரிதான் என்கிறார் ஓபிஎஸ் கோஷ்டி நிர்வாகி நிர்மலா பெரியசாமி.