18 அதிமுக எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்தது சட்டவிரோதம் என்றும் ஜனநாயக படுகொலை என்று ஸ்டாலின் தெரிவித்தார்.
அரசியல் சட்ட கடமையை செய்ய ஆளுநர் வித்யாசாகர் ராவ் தவறிவிட்டதாக மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார். தமிழகத்தில் அரசியல் நெருக்கடிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பொறுப்பேற்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பெரும்பான்மையை இழந்த அரசு கஜானாவை கையாள மத்திய பாஜக அரசு அனுமதித்துள்ளது என்றும், மத்திய பாஜக அரசு மக்கள் மன்றத்துக்கு பதில் சொல்லியே தீர வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.
பழனிச்சாமிக்கு எதிராக வாக்களித்த ஓ.பி.எஸ். உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்களை நீக்கம் செய்யாது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். சபாநாயகர் பதவிக்கு உரிய மாண்பை தனபால் கெடுத்துவிட்டதாகவும் அதிமுக உறுப்பினர் போல் சபாநாயகர் தனபால் செயல்பட்டு ஜனநாயக நெறிமுறைகளை சீர்குழைத்த சபாநாயகர் தனபால் பதவி விலக வேண்டும் என்றும், சட்டப்பேரவை தலைவர் பதவியில் நீடிக்கும் தார்மீக உரிமையை தனபால் இழந்து விட்டதாக ஸ்டாலின் குற்றம் சாட்டினார்