பெரியாரின் பிறந்த நாளில் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள், இல்லாதவர்கள் என அனைவரும் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நிகழ்ச்சிகளில் பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பதும் ஒரு நிரலாக இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதை திட்டமிட்டு வேண்டுமென்றே அவர் தவிர்த்து காரணம் இப்போது வெளியே வந்து உள்ளது.
எடப்பாடி பழனிச்சாமியைப் பொறுத்தவரை பெங்களூருவில் இருக்கும் அவரது சம்பந்தி ஏற்கனவே பொதுப்பணித்துறை முறைகேடு வழக்கில் கைதாகியிருக்கிறார். மகனையும், பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியையும் கூட தங்கள் மிரட்டிதான் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த நிலையில் அவர்களை ஆட்டு விக்கும் சக்திகளைக் கடந்து ஒரு அடி நகர்ந்தால் கூட மொத்த குடும்பமும் கம்பி எண்ண வேண்டியிருக்கும் என்பது அவருக்கே தெரியும் என்னும் நிலையில்.
எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியின் கட்டுப்பாட்டின் கீழ்தான் செயல்படுகிறார். அமித்ஷாவின் உத்தரவுகளையும் அவர் பின்பற்றுவதாக கூறப்படுகிறது. தலைமைச் செயலாளர், தலைமை வழக்கறிஞர் இருவருமே இப்போது அரசின் கொள்கை முடிவுகளை எடுப்பவர்களாக மாறியிருக்கிறார்களாம்.
தமிழக பிஜேபி கட்சியில் அதிமுகவை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஏதேனும் ஒரு வார்த்தை கண்டித்து விட்டால் உடனே அதிமுகவை பாதுகாத்து துக்ளக் குருமூர்த்தி முதல் கடை தொண்டர் நாராயண திரிபாதி வரை எதிர்கட்சிகளை நோக்கி வசை சொல் படுவதை மூலம் இதனை அறியலாம் என்றும்...
மேலும் பெரியாரின் ஜென்ம எதிரிகளான ஆர் எஸ் எஸ் பிஜேபி மேலிடத்தை பகைத்து வீண் தோஷத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டாம் என்று பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பதை தவிர்த்து விட்டாராம் எடப்பாடி பழனிச்சாமி.
தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் முதல்வர் ஒருவர் ஒருவர்பெரியரை மதிக்காமல் விடுவது இதுவே முதல முறை என்றும், தான் பெரியார் வகுப்பில் மாணவி என்று பெருமையுடன் சொல்லும் ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்துபவர்கள் இந்த செயல் திகைப்பை தருவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்தனர்...