நாமக்கல் மாவட்டம் கருப்பட்டிப்பாளையத்தில் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சயில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆட்சி நீடிக்காது என நினைத்தவர்களின் எண்ணத்தை உடைத்து ஆட்சி சிறப்பாக நடைபெறுகிறது என்றும் மாநில அரசின் நலத்திட்டங்களுக்கு நிதி பெற இணக்கமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
முன்னதாக பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அந்த குடும்பம் கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்ற நினைக்கிறது. அதனால் ஜெயலலிதா யாரும் அவர்களுடன் தொடர்பில் இருக்கவேண்டாம் என்றார்.
பின்னர் சில மாதங்கள் கழித்து நன் அவரை சந்திக்கையில், அவனுடன் பேசினீர்களா? என்றார் ஜெயலலிதா, எப்போதும் அவன், இவன் என்று சொல்லமாட்டார். நான் திகைத்து நிற்க மீண்டும் அவர் தினகரனுடன் பேசினீர்களா? என்றார். நான் பேசுவது இல்லை என்றேன். நான் உயிரோடு இருக்கும் வரை என் வீட்டில் அவனை நுழைய விட மாட்டேன் என்று ஒவ்வொரு ஆறு மாதமும் என்னை பார்த்து ஜெயலலிதா சொல்லியுள்ளார்.
சசிகலா குடும்பம் குறித்து ஏற்கனவே 10% உண்மையை கூறியுள்ளேன். தற்போது மேலும் ஒரு சதவீத உண்மையை வெளிப்படுத்தியுள்ளேன். நான் முன்னவே சொன்னேன் சசிகலா, டிடிவி தினகரன் குடும்பம் குறித்து 100க்கு 10 சதவீதம் தான் கூறியுள்ளேன் என்று தற்போது இது ஒன்று. இத்தோடு அவர்கள் நிறுத்திக் கொள்ளாவிட்டால் மேலும் 89 சதவீத உண்மையை அடுத்தடுத்து வெளியிட நேரிடும் என எச்சரித்துள்ளார்.