சென்னையில் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்த அங்காடியில் உள்ள பொருட்கள் கலாவதியான பொருட்களாக இருப்பது தெரியவந்துள்ளது...
இதே அமைச்சர் முன்னர் வைகை அணையை தெர்மோகோல் வைத்து மூட முயன்று சர்ச்சையில் சிக்கி உலகெமெங்கும் கேலி பொருள் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது...
சென்னை திருவல்லிக்கேணியில் நவீன மையமாக்கப்பட்ட தமிழ்நாடு காமதேனு கூட்டுறவு சிறப்பு அங்காடியை கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று காலை திறந்து வைத்துள்ளார். குழந்தைகளுக்கான நாப்கின், எண்ணெய், சோப்பு, ஷேம்பு, பேஸ்ட் என பல்வேறு பொருட்களும் காலம் முடிந்தவிட்ட நிலையிலும் இங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான பொருட்கள் மட்டுமின்றி காலாவதியாக இன்னும் சில நாட்களே உள்ள உணவு பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இதனை கண்டு அதிர்ந்த மக்கள், அங்கு கூடி இருந்த செய்தியாளர்கள் இடம் பொருளை காட்டவே இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ சிரித்து விட்டு சற்றும் சம்பந்தம் இல்லாமல் பில் போடும் போது ரெட் லைட் எரியும் போது காலாவதியான பொருட்கள் அது தானாகவே ஒதுக்கிவிடும் என்ற பதிலை சொன்னதை கேட்டு...
அதிர்ச்சியில் மீண்டு சுதாரித்த செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு மேற்கொண்டு பதில் எதுவும் கூறாமல் தப்பித்தோம் பிழைத்தோம் என்று வண்டி ஏறி ஓடி விட்டார் அமைச்சர் செல்லூர் ராஜூ.