உள்ளாட்சி தேர்தலை நவம்பர் 17-ம் தேதிக்குள் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.
இப்படி மனுத்தாக்கல் செய்து இடைக்கால தடை உத்தரவை பெற்று விடுவார்கள் என்பதற்காகத் தான் திமுக எம்பி ஆர் எஸ் பாரதி சார்பில் முன்கூட்டியே கேவியட் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருப்பதால் திமுக கட்சியின் கருத்தை கேட்பதும் அவசியம் ஆகியுள்ளது.
தேர்தலை நடத்த வேண்டிய தேர்தல் ஆணையம் நடத்தாமல் இருப்பதற்கு நீதிமன்றம் போக வேண்டிய அவல நிலையை மாநிலத்தில் அதிமுக அரசும் மத்தியில் மோடி அரசும் ஏற்படுத்தி உள்ளன... இது ஜனநாயகத்திற்கு உகந்தது அல்ல என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்...
தேர்தல் ஆணையம் தாக்கல் செய்துள்ள இடைக்கால மனு அடுத்த வாரம் செவ்வாய் கிழமை அல்லது புதன் கிழமை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் போது திமுக சார்பில் தொடரப்பட்டுள்ள கேவியட் மனுவையும் அவர்கள் தரப்பு வாதத்தையும் கேட்ட பிறகு தான் உச்சநீதிமன்றம் உத்தரவை வழங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.