மாணவி அனிதா தற்கொலை எதிரொலியாக மாணவர்கள் தமிழ்நாடு முழுதும் நடைபெற்று வருகிற போராட்டம் இப்பொது வேகமாக பரவி வருவதை காண முடிகிறது என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்...
மாணவர்கள் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது சாலைக்கு வராமல் நடைபாதையில் நடந்த போராட்டம் போலவே இப்போதும் எந்த பொதுமக்களுக்கும் பாதிப்புகள் தராத வகையில் தமிழ்நாட்டில் பல இடங்களில் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு மற்றும் கல்லூரி வாசல்களில் நின்று, நீட் விலக்கு போராட்டத்தினை பல இடங்களில் ஆரம்பித்து இருப்பது காவல் துறையை மட்டுமில்லை அதிமுக பிஜேபி கட்சி தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்று அவர்கள் கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன...
நேற்று நள்ளிரவில் அரியலூரில் கொட்டும் மழையிலும் விடாமல் கல்லூரி மாணவர்கள் நீட் க்கு எதிராக கோஷம் எழுப்பி உள்ளிருப்பு போராட்டத்தினை தொடங்கி விட்டதை தொடர்ந்து ராயப்பேட்டை புதுக்கல்லூரி 1000+ மாணவர்களும் #நீட் இன்று போராட்டத்தில் குதித்தனர்...
நேற்று சென்னையில் பச்சையப்பாஸ், லயோலா, நந்தனம் கல்லூரி போராட்டம் நடத்தி நீட் திரும்ப பெரும் வரையில் தொடரும் என்று ஆவேசம் பொங்க கூறினார்கள்...
இன்று ராஜபாளையம் சங்கரன்கோவில் சாலையில் பள்ளி மாணவர்கள் மாநில மத்திய அரசுகளை எதிர்த்து போராட்டம் நடத்தினர்.
பள்ளி மாணவர்கள் வரை போராட்டம் வந்து விட்டதை கண்டு மாநில எடப்பாடி அரசும்... நீட் க்கு ஆதரவாக ஏதும் கூற முடியாத நிலை ஏற்பட்டு உள்ளதே என்று பிஜேபி யின் தலைவர்கள் வருந்துவதாக அக்கட்சினர் தெரிவித்தனர்.
தமிழக அதிமுக அமைச்சர்கள் அளித்த உறுதிமொழி மற்றும் பிஜேபி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கொடுத்த வாக்குறுதி நம்பி மோசம் போனதால் தான் விரக்தியில் தான் மாணவர்களை போராட மூடுக்கு தள்ள பட்டதாக அரசியல் நோக்கர்கள் தொலைக்காட்சி விவாதத்தில் கருத்து தெரிவித்தனர்...