செங்கத்தில் பா.ஜ.க ஒன்றிய செயற்குழு பொதுக் கூட்டம் நடந்ததது. இந்த நிலையில் கூட்டம் நடந்த இடத்திற்கு வந்த ஐயப்பன் என்பவர் பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
தனது மகன் பாலாஜி +2 தேர்வில் 1200 க்கு 1186 பதிப்பெண் பெற்றுள்ளதாகவும், ஆனால் நீட்டில் மார்க் குறைந்ததால் மருத்துவ சீட் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு பாஜக மத்திய அரசுதான் காரணம் என்றும் கூறி அவர் போராட்டம் நடத்தினார்.
இதையடுத்து அங்கு கூடியிருந்த பா.ஜ.கவினர் ஐயப்பனை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அங்கிருந்த போலீஸார் ஐயப்பனை மட்டும் கைது செய்து அங்கிருந்து கூட்டிச் சென்றனர். பா.ஜ.க-வினர் யாரும் கைது செய்யப்படவில்லை.
மருத்துவ 98.75% கட்ஆப் எடுத்தும் மாணவி அனிதா மருத்துவ இடம் கிடைக்காத நிலையில், உச்சநீதிமன்றம் வரை சென்றும் போராடியும் சீட் கிடைக்காத விரக்தில் தற்கொலை செய்த கொண்ட நிலையில், இன்னொரு மாணவரின் தந்தையை கைது செய்த அதிமுக எடப்பாடி பழனிச்சாமி தமிழக அரசின் செயலை சமூக வலைகளில் பலரும் கண்டித்து வருகின்றனர்...