சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். பெரம்பலூர் எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வனை கலந்து கொள்ளாதது கண்டு அங்குள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தற்போது அதிமுகவின் எம்.எல்.ஏ - க்களின் விவரம் :
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் : 135
டிடிவி தினகரன் அணி : 21
கட்சிக்கு அப்பாற்பட்ட சபாநாயகர் : 1
சுயேச்சை : 3
வரமறுத்த தமிழ்செல்வன் : 1
அதனால் 109 பேர் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்றனர்.
எதிர் கட்சி தலைவர் சட்டமன்றம் கூட்ட வேண்டும் என்று கோரும் நிலையில் பி.ஜே.பி தலைவர்கள் சொன்ன பேச்சை கேட்டு சசிகலா குடும்பத்தை தேவை இல்லாமல் வம்புக்கு இழுத்து இப்படி பெரும்பான்மை இல்லாமல் போய் விட்டதே என்ற அங்கு கூடிய அதிமுக எம்எல்ஏக்கள் கவலையுடன் பேசி கொண்டனர்.
இதன் இடையே ஆட்சி முக்கியம் அல்ல கட்சியே முக்கியம் என்றும் எடப்பாடிபழனிச்சாமியை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கும் வரை ஓயமாட்டோம் என்றும் டிடிவி தினகரன் தரப்பு எம்.எல்.ஏ-க்கள்.
புதுவையில் கூட்டத்தை நடத்திய எம்.எல்.ஏ வெற்றிவேல் பேட்டி அளித்தார்.