கோரக்பூர் 72 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நினைவைவிட்டு அகலாத நிலையில் உத்தரபிரதேசத்தில் பிஜேபி அரசின் யோகி ஆட்சியில் மேலும் ஒரு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 49 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளது.
ஃபருக்காபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 20-ம் தேதி வரையிலான ஒரு மாத காலத்தில் 49 குழந்தைகள் பிறந்ததுமே ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தது.
மாவட்ட ஆட்சியர் ரவீந்தர குமார் உத்தரவின் பேரில் நகர ஆணையர் தலைமையில் மூவர் குழு விசாரணை நடத்தியது. அக்குழுவின் அறிக்கை அடிப்படையில் தலைமை மருத்துவ அதிகாரி, தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் மற்றும் சில மருத்துவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஆக்சிஜன் பற்றாக்குறையால் கோரக்பூர் மருத்துவமனையில் 296 குழந்தைகள் உயிரிழந்த அதே காலக்கட்டத்தில் ஃபருக்காபாத்திலும் 49 பச்சிள குழந்தைகள் உயிரை பறிகொடுத்துள்ளது.
உத்தரபிரதேசத்தில் சுகாதார உள்கட்டமைப்பு மிகவும் மோசமாக உள்ளதையே இந்த சம்பவங்கள் எடுத்து காட்டுவதாக கூறும் சமூக ஆர்வலர்கள் நீட் தேர்வு தொடர்ந்தால் தமிழ் நாட்டிலும் இதே நிலை ஏற்படும் என்கிறார்கள்...
மேலும் கல்வி வல்லுனர்கள் அனிதா விவகாரம் சுட்டி காட்டி கிராம புறங்களிலும் மருத்துவ வசதி மேம்படுத்த நீட் தேர்வு எந்த அளவுக்கு உதவும் என்று கேள்வி எழுப்பியும் உள்ளனர்...