மாணவி தற்கொலைக்கு பின்பாக தமிழகம் முழுவதுமே போராட்ட களமாக மாறிவருகிறது

Special Correspondent

சென்னையில் தலைமை செயலகத்தை மாணவர் அமைப்பினர் முற்றுகையிட முயற்சி செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தீவுத்திடல் அருகே உள்ள சாலை வழியே வந்து தலைமை செயலகத்தை முற்றுகையிட மாணவர் அமைப்பினர் முயற்சி செய்தனர். முற்றுகையிட முயன்ற மாணவர் அமைப்பினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

சென்னை மவுண்ட் ரோடு புஹாரி ஹோட்டல் அருகே நடந்த போராட்டம் காரணமாக போக்குவரத்து அரை மணி நேரம் பாதிக்கப்பட்ட பின்னர் மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறையில் நடைபெற்ற போராட்டத்தின்போது அனிதாவின் உயிரை காவு வாங்கிய நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி இந்திய மாணவ சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.

திருவாரூர் திருவிக அரசு கலைக்கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது அரசுக்கு எதிரான முழக்கங்களை அவர்கள் எழுப்பினர்.

இதேபோல மதுரை, கோவை, ஆம்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் ஆர்ப்பாட்டங்களும், அஞ்சலி நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

மாணவி அனிதா வீடு அருகே திரைப்பட இயக்குநர் கவுதமன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது .சேலம் காஞ்சிபுரம் உள்ளிட்ட பல இடங்களில் திமுகவினர் மத்திய மணிலா அரசை கண்டித்து நீட் விலக்க கோரி போராட்டம் நடத்தினர்.

திராவிட கழகத்தினர் திநகர் பிஜேபி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடி வருவதால் அங்கு போலீஸ் குவிக்கப்பட்டு அந்த இடம் பதட்டமாக உள்ளது.