மதுரையைச் சேர்ந்த லூயிஸ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைகிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில், 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு அரசு சார்பில் ரூ.1000 ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது.

Special Correspondent

மேலும், விதவைப் பென்சன் பணமும் சம்மந்தப்பட்டவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது. இந்நிலையில், குறைந்தபட்ச இருப்பு காரணம்காட்டி ஒவ்வொரு முறையும், வங்கிகளின் சார்பில் மாதமாதம் ரூ.350 பிடித்தம் செய்வதால், ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் இருப்பவர்களுக்கு மேலும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. எனவே, முதியவர்களின் வங்கிக்கணக்குகளில் பிடித்தம் செய்யும் நடைமுறைக்கு இடைக்கால தடை விதிக்கவேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, நிஷா பானு ஆகியோர் அடங்கிய அமர்வு, வங்கிகளில் முதியவர்களின் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புக்காக அபராதம் பிடித்தம் செய்யும் முறைக்கு இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்தனர்.

மேலும், இதுகுறித்து ஆர்.பி.ஐ மற்றும் எஸ்.பி.ஐ உள்ளிட்ட இதர வங்கிகளின் தலைவர்கள் பதில்மனு தாக்கல் செய்யவேண்டும் எனக்கூறி வழக்கு விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைப்பதாக உத்தரவிட்டுள்ளனர்.

சமீபத்தில் மாதம் ஒன்றுக்கு குறைந்தபட்ச இருப்பு இல்லாவிட்டால் பிடித்தம் செய்த தொகை மூலம் 340 கோடிகள் வருமானம் என்று பாரத ஸ்டேட் வாங்கி அறிவித்த நிலையில் பல்வேறு பதிவர்கள் சமூகவலைத்தளத்தில் இதனை கண்டித்து இருந்த நிலையில் ஆகஸ்ட் 1 முதல் பாரத ஸ்டேட் வாங்கி பென்ஷன் தொகையில் குறைந்தபட்ச இருப்பு இல்லாவிட்டால் பிடித்தம் கிடையாது என்று அறிவித்தாலும் ., மற்ற வங்கிகள் குறைந்தபட்ச இருப்பு இல்லாவிட்டால் பிடித்த தொகை குறித்து மவுனம் சாதித்த நிலையில் இந்த தீர்ப்பை வரவேற்பதாக சமூக ஆர்வலர்கள் பலரும் கருத்து கூறியுள்ளனர்...