விண்ணப்பித்த 3,000 பேரில் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற 2,500 பேரில் பெரும்பாலானவர்கள், பிஇ, எம்.ஏ, எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.பில் பட்டதாரிகள் என்பது தெரிய வந்துள்ளது. வரும் ஞாயிறன்று நடைபெற உள்ள நேர்முகத் தோ்வில் இவர்கள் பங்கேற்கின்றனர்.
இது குறித்து பேசிய வழக்கறிஞர் சங்கத்தை சேர்ந்தவர்கள் பொறியியல் பட்டதாரிகள் உள்ளிட்ட பலர் துப்புரவு வேலைக்கு விண்ணப்பித்துள்ளது வேதனை தர கூடிய விஷயமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அவர்கள் படித்த படிப்பிற்குரிய வேலை வாய்ப்பு இல்லை என்பதையே இச்சம்பவம் படம் பிடித்து காட்டுவதாக குறிப்பிட்டனர். மொத்தமுள்ள 140 பணிகளுக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள். இந்த பணிகளுக்கு மொத்தம் 3,000 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
இதில் ஒரு சிலரே 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள். துப்புரவு பணிக்கு பட்டதாரிகள் அதிகளவில் விண்ணப்பித்து உள்ளது உயர்நீதிமன்ற வட்டாரத்தில் ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.