பிரமாண்ட பேனர்கள் வைப்பது அந்தஸ்தின் சின்னமாக மாறிவிட்டது.பேனர்கள்இடையூறு ஏற்படுவதாக பலர் மன்றாடி வருகின்றனர். ஃப்ளெக்ஸ் மற்றும் பேனர்கள் வைப்பதால் போக்குவரத்துக்கு தமிழகத்தில் அரசியல், சினிமா, திருவிழா என எந்த நிகழ்வாக இருந்தாலும் ஃப்ளெக்ஸ், பேனர்கள் வைத்து மாஸ் காட்டுவது வழக்கம்.
சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த திரிலோக்ஷனா குமாரி என்பவர் பேனர்களால் போக்குவரத்து பாதிக்கப்படுவதாக குறிப்பிட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
நீதிபதி வைத்திய நாதன் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, போக்குவரத்துக்கு இடையூறாக கட் அவுட் மற்றும் பேனர் வைப்பது கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
உயிரோடு இருப்பவர்களின் புகைப்படத்தைப் பயன்படுத்தி கட் அவுட், பேனர்கள் வைக்கக் கூடாது என்று உத்தரவிட்டார்.
நீதிபதியின் உத்தரவு குறித்து பாராட்டுகள் குவிந்தன. ஆனால், பேனர் தடையை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சென்னை மாநகராட்சி வழக்கு தொடுத்தது.
அவ்வழக்கை அவசர வழக்காக விசாரிக்கவும் நீதிமன்றத்திடம் கோரியது. தமிழக அரசின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. உயிரோடு இருப்பவர்களுக்கு பேனர் வைப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என்று நீதிமன்றம் திட்டவட்டமாக கூறிவிட்டது.
இந்த நிலையில் அரசு சார்பாக இன்று திருச்சியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. இந்த விழாவை முன்னிட்டு பல்வேறு விதமான பேனர்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தொடர்ந்துள்ள பொதுநல வழக்கில், திருச்சியில் நடைபெறவிருக்கும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் அனுமதியில்லாமல் நூற்றுக்கணக்கான பேனர்கள் வைக்கப்பட்டிருப்பதாகவும், சாலையின் இரு பக்கங்களிலும் வைக்கப்பட்டுள்ள இந்த பேனர்களால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும், விதிகளுக்கு புரம்பாக இந்த பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதால் இவற்றை உடனடியாக அகற்ற உத்தரவிடவேண்டும் எனவும் கோரியிருந்தார்.
ஏற்கனவே, உயிரோடு இருப்பவர்களின் புகைப்படங்கள் அடங்கிய பேனர்கள் வைக்கத் தடை விதித்து உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்., திருச்சியில் நடைபெறவிருக்கும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் வைக்கப்பட்டுள்ள எத்தனை பேனர்களுக்கு அனுமதி வாங்கப்பட்டுள்ளது.
எத்தனை பேனர்களுக்கு அனுமதி வாங்கப்படவில்லை உள்ளிட்ட விவரங்களை இன்று மாலை 4.30 மணிக்குள் உயர்நீதிமன்றத்தில் அறிக்கையாக விளக்கி சமர்ப்பிக்க உத்தரவிட்டது.