கந்துவட்டிக் கொடுமையால் இசக்கிமுத்து என்பவர் தன் மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள்ளேயே தீக்குளித்த சம்பவம் இந்தியா முழுவதும் #NellaiFamilyAblaze என்ற ஹாஷ்டாகில்பேரலைகளை ஏற்படுத்தி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக 1.4 மில்லியன் தொடர்பாளர்களை சமூகவலைத்தளத்தில் கொண்ட Yuma JAHARO [தமிழச்சி] , Human rights activist பாரிஸ் பிரான்ஸ் தெரிவிக்கும் கருத்துக்கள் விவரம் இதோ :
கூலி வேலை செய்யும் சாமானிய மக்களும், நடுத்தர மக்களும் கந்து வட்டிகளில் மாட்டிக் கொள்வதும் அவர்களிடையே அத்துமீறி அடாவடிகளில் ஈடுபடும் கந்து வட்டிக்காரர்கள் மீது வரும் புகார்களை கண்டு கொள்ளாமல் இருப்பதற்கும் தமிழ்நாடு முழுவதும் உள்ள காவல்துறையினருக்கு 'மாமூல்' வருகிறது.
2002-க்கு பிறகு கந்து வட்டியால் தற்கொலையில் ஈடுபடுவது அல்லது படுகொலைகள் நடப்பது அதிகரிக்கவே வலுக்கட்டாயமாக தமிழக அரசுக்கு கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாக, 14.11.2003-இல் கந்து வட்டி தடை சட்டம் கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டன.
முன்பு இருந்த நிலை போலவே தமிழ் திரைபடதுறையில் கந்து வட்டியும் மக்களிடையே கந்து வட்டி விநியோகிக்க அரசியல்வாதியும் காவல்துறையும் கறுப்பு பண விநியோகத்திற்கு சாதிக்காரன்களும் சந்தை படுத்தப்பட்டார்கள்.
இன்றுவரை தமிழகத்தின் நிலை இதுதான். நேற்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கூலி தொழிலாளி தன் குடும்பத்தினருடன் தீயிட்டுக் கொண்டு எரிந்த காட்சி இணையதளங்களில் வேகமாக பரவி தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஒருவேளை அக்கூலி தொழிலாளி தன் வீட்டிற்குள் தீயிட்டு செத்திருந்தால், 'கடன் தொல்லையால் கூலித் தொழிலாளி தன் குடும்பத்தினருடன் தற்கொலை' என்று பெட்டி செய்தி மட்டும் வந்திருக்கும். தமிழக மக்களுக்கும் அது வழக்கமாக செய்தியாக இருந்திருக்கும்.
மக்களின் பதற்றங்களால், சாபங்களால், பாதிக்கப்பட்டவர்களின் தற்கொலைகளால் அதிகார வர்க்கங்கள் திருந்தப் போவதில்லை. கந்து வட்டியும் ஒழிந்துவிடப் போவதில்லை. இது மக்கள் போராட்டமாகவும் மாறப் போவதில்லை.
நாம் உணர்ச்சி வேகத்தில் விவாதிக்க பழக்கப்பட்டிருக்கிறோம். அறிவு வேகத்தில் செயல்பட தயார்படுத்தப்படவில்லை. எல்லா மக்கள் போராட்டங்களின் எழுச்சியும் இப்படித்தான் தோற்றுக் கொண்டிருக்கின்றன!
அதிகாரத்தை அடக்காதவரை அதிகாரம்தான் மக்களை அடக்கும் என்று அவர் கூறியுள்ளார். ஸ்வாதி ராம்குமார் கொலைகள் மற்றும் ஜெயலலிதா மரணத்தை முன்னமே கூறிய காரணத்தினால் தமிழக போலீசார் தமிழச்சி மீது 14 வழக்குகளை பாய்ச்சினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது..
.