மாசுபாடுகளால், அதிக இறப்புகள் ஏற்படுவதில் இந்தியா 5வது இடத்திலும், சீனா 16வது இடத்திலும் உள்ளன.
புருணை மற்றும் ஸ்வீடனில் மாசுபாடு காரணமாக மிக குறைவான இறப்புகள் நேரிடுகின்றன.
அரசு சாராத நிறுவனமான 'ப்யுர் எர்த்'-ஐ சேர்ந்த ஆய்வு ஆசிரியர் கார்டி சான்டில்யா இது பற்றி தெரிவிக்கையில், "மாசுபாடு, மோசமான ஆரோக்கியம் மற்றும் சமூக அநீதி ஆகியவை மிகவும் ஆழமாக பின்னிப் பிணைந்தவை" என்கிறார்.
மிக பெரிய ஆபத்துக்குரிய காரணியாக விளங்கும் காற்று மாசுபாடு, 6.5 மில்லியன் பேரை இயற்கையாக இறப்பதற்கு முன்னாலேயே இறப்பதற்கு காரணமாகிறது.
வாயுக்கள் போன்ற வெளிப்புற ஆதாரங்கள், விறகு எரிப்பது அல்லது நிலக்கரி பயன்பாடு போன்ற வீடுகளில் இருந்து வெளிவரும் மாசுபாடுகளும் இதில் உள்ளடங்குகின்றன.
அடுத்த மிக பெரிய ஆபத்துக்குரிய காரணியான நீர் மாசுபாடு. இது 1.8 மில்லியன் நபர்களின் இறப்புக்கு பங்காற்றியுள்ளது. அதேவேளையில் வேலையிடங்களில் காணப்படும் மாசுபாட்டோடு தொடர்புடையதாக 8 லட்சம் இறப்புகள் உலக அளவில் நிகழ்ந்து வருகின்றன.
இதில். இந்தியா போன்ற விரைவாக பொருளாதார வளர்ச்சி கண்டு வரும் இடங்களில் உணரப்படும் பெரிய பாதிப்புகளை கொண்டிருக்கும் ஏழை நாடுகளில் 92 சதவீத இறப்புகள் நிகழ்கின்றன.
இந்த முடிவுகள் இரண்டு ஆண்டுகள் நடத்தப்பட்ட ஆய்வில் கிடைத்துள்ளன.