இமாச்சல பிரதேச மாநிலத்தில் நவம்பர் 9ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அம்மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும், டிசம்பர் 18ம் தேதிக்குள், குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் கூறியது.
ஆனால், குஜராத் தேர்தல் தேதி அறிவிப்பை தேர்தல் ஆணையம் ஒத்தி வைத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் காங்கிரஸ் கட்சி, பிரதமர் நரேந்திர மோடியின் தலையீட்டால் தேர்தல் தேதி அறிவிப்பை தேர்தல் ஆணையம் ஒத்தி வைத்துள்ளதாக விமர்சனம் செய்து வருகிறது.
இந்த நிலையில், முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்., மூத்த தலைவருமான, சிதம்பரம், 'டுவிட்டர்' சமூக தளத்தில் கூறியுள்ளதாவது: குஜராத் அரசு, அனைத்து சலுகைகளையும் அறிவித்த பின், விடுமுறையில் இருந்து, தேர்தல் ஆணையம் அழைக்கப்படும்.
வரும் ஞாயிற்றுக்கிழமை, ஐந்தாவது முறையாக குஜராத் செல்ல உள்ள, பிரதமர் நரேந்திர மோடியே, பிரசார கூட்டத்தில் குஜராத் தேர்தல் தேதியை அறிவிக்கும் அதிகாரத்தை அவருக்கு தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது. இவ்வாறு அவர் மோடியை கிண்டல் செய்து வெளிட்ட ட்விட் பெரும் வரவேற்பரை பெற்றுள்ளது...
வடோதரா செல்லும் மோடி ரூ.1,140 கோடி மதிப்பீட்டில் மான் பூங்கா, இரண்டு மேம்பாலங்கள், நீர் சுத்திகரிப்பு நிலையம், விலங்குகள் மருத்துவமனை உள்ளிட்ட 8 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ட்விட்டிட்லே பலரும் ஆமாம் மோடி எங்களுக்கு கொடுத்த 15 லட்சம் தீர்ந்து போச்சு இப்போ புதுசா கொடுக்க போறாரு மோடின்னு கேலி செய்துள்ளனர்.