தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் திருவாரூரில் ரமேஷ் என்பவரின் 2 வயது குழந்தை விஷ்வா உயிரிழந்துள்ளார்.

Special Correspondent

கும்பகோணம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஷ்வா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை அடுத்து குழந்தை உயிரிழப்பிற்கு சுகாதார சீர்கேடே காரணம் என்று குற்றம் சாட்டிய உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் டெங்கு காய்ச்சல் தொடர் மரணம் காரணமாக திருவண்ணாமலையில் அமைச்சர் விஜயபாஸ்கரை முற்றுகையிட்டு நோயாளிகள் போராட்டம் நடத்தியுள்ளார்

மேலும் மேலூரை சேர்ந்த காசிவிஷ்வநாதன் என்பவர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் சேலம் மற்றும் தருமபுரி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு செய்தார். ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.சுகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் அருள்ஜோதி அரசன் ஆகியோர் உடனிருந்தனர்.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெங்குவிற்கு தாமதமாக சிகிச்சை எடுத்துக்கொள்வதே பாதிப்பிற்கு முக்கிய காரணம் என்று கூறியுள்ளார். எதிர்ப்பு சக்திக்காக நிலவேம்பு கசாயம் அளிக்கப்படுவதாகவும், நிலவேம்புக் கசாயம் அங்கீகரிக்கப்பட்ட சித்த மருந்து என்றும் அவர் தெரிவித்துள்ளார். நிலவேம்புக் கசாயத்தை 1000 மில்லி கிராம் வரை எடுத்துக் கொள்ளலாம். நிலவேம்புச் சாறை எடுத்துக் கொள்வதன் மூலம் மலட்டுத் தன்மை ஏற்படும் என்பது உண்மையல்ல என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் நிலவேம்பு கசாயம் குறித்து பிரபலங்களுக்கு சந்தேகம் இருந்தால் அரசு சித்த மருத்துவர்கள் மூலம் விளக்கம் அளிக்க அரசு தயாராக உள்ளதாக ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். டெங்குவை ஒழிக்க மக்களின் ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

தொடரும் டெங்கு மரணத்தின் அசாதாரண சூழ்நிலை தமிழ்நாட்டின் காரணமாக எதிர்கட்சி திமுக தனது மாவட்ட செயலார்கள் கூட்டி பின்வரு தீர்மானங்களை இயற்றி உள்ளது.

தமிழகத்தில் சுகாதார பேரிடர் ஏற்பட்டுள்ளதாக அரசு அறிவிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றம் என்றும், அதிமுக ஊழல் அமைச்சர்கள் கிரிமினல் நடவடிக்கையில் இருந்து தப்பமுடியாது என தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும், டெங்கு விஷயத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வலியுறுத்தியும் திமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.