மனிதனை விடவும் புத்திக் கூர்மையுடன் இருக்கும் வௌவால்களை பாதுகாப்பதற்காக ஊனத்தூரில் உள்ள மக்கள் தீபாவளியன்று பட்டாசு கூட வெடிப்பதில்லை என்று முடிவு எடுத்துள்ளார்கள்
“வௌவால்களின் முக்கிய உணவான பழங்கள் இந்தப் பகுதியில் அதிகமாக இல்லாத போதிலும், மாலை ஆறு மணிக்கெல்லாம் இங்கிருந்து கூட்டம் கூட்டமாக கிளம்பும் வௌவால்கள், இரவு முழுவதும் இரை தேடிவிட்டு அதிகாலை மூன்று மணி முதல் ஆறு மணிக்குள்ளாக இந்த மரத்துக்கு வந்துவிடும். காலங்காலமாக இந்த மரத்தில் வௌவால் கூட்டம் வசித்து வருகிறது.
கடந்த இரண்டு ஆண்டாக மழையில்லாமல் போனதால், போதிய அளவு இனப்பெருக்கமும் நடைபெறவில்லை, கொஞ்சம் வௌவால்கள் இரையில்லாமல் உயிரிழந்து விட்டது. அதனால், இப்போது கொஞ்சம் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இன்னும் கொஞ்சம் நாளில் மருத மரத்துக்கு பக்கத்தில் உள்ள அரச மரத்திலும் வௌவால்கள் நிரம்பிவிடும். இந்த வௌவால் கூட்டம் பயமில்லாமல் இருக்கவேண்டும் என்பதற்காக இங்குள்ள மக்கள் யாருமே தீபாவளி நேரத்தில் பட்டாசு வெடிக்க மாட்டோம். யாராவது சின்ன பசங்க வெடிக்கவேண்டும் என்று விரும்பினாலும், ஊருக்கு வடக்குப்பக்கம் போய்தான் வெடிப்பார்கள். இந்த பகுதிக்கு வேட்டைகாரர்களையும் வரவிடமாட்டோம்...” என்கிறார் பெருமாள்கோயில் காட்டை சேர்ந்த செல்வ பிரபு.
இதுபோலவே, நாமக்கல் மாவட்டம், நமகிரிபேட்டை ஒன்றியம், வேப்பிலைப்பட்டி, கருத்தராஜாபாளையம் போன்ற ஊர்களிலும், அங்கு உள்ள மரங்களில் வாழும் வௌவால்கள் பயந்து போய்விடக் கூடாது என்பதற்காக தீபாவளியன்று பொதுமக்கள் யாரும் பட்டாசு வெடிக்காமல் இருக்கிறார்கள் .
நாகரீகமும், கல்வியறிவும் இல்லாத அந்த கிராமத்து மக்களிடம் இருக்கும் உயிரினக்களையும், இயற்கையும் காக்கும் பண்பாடும், இயற்கையோடு அமைத்த சுற்றுச்சூழல் விழிப்புணர்வும், அதைப்பற்றி படித்து அறிந்து, பட்டம் பெற்று வாழ்ந்து வரும் நகர மக்களிடம் இல்லாத காரணத்தினால் அந்த ஆண்டு சென்னையில் அனுமதிக்கப்பட்ட அளவை விட ஒன்றரை மடங்கு அதிகரித்துள்ளது.
ஒரு கனமீட்டருக்கு 100 மைக்ரான் என்பதே அனுமதிக்கப்பட்ட காற்றுமாசு அளவாகும். ஆனால் நேற்று பட்டாசு வெடித்ததன் காரணமாக 2.5 மைக்ரானில் 263 நுண்துகள்கள் உள்ளது.