தில்லி தலைநகர் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் காவல்துறையானது, மத்திய அரசின் துணைநிலை ஆளுநரின் நேரடிக் கட்டுப்பாட்டில் வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜாலுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கேஜரிவால் " தில்லி தலைமைச் செயலகத்தின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எனது நீல நிற வேகன்-ஆர் கார் திருடு போயுள்ளது. எனது கார் திருடப்படுவது சாதாரண நிகழ்வு தான். ஆனால், தலைமைத் செயலகத்தின் வாசலிலேயே அந்தக் கார் திருடப்பட்டிருப்பது, தில்லியில் சட்டம் ஒழுங்கு எந்த அளவிற்கு மோசமான நிலையை எட்டியுள்ளது என்பதைக் காட்டுகிறது. முதல்வரின் கார் திருடு போகும் மாநிலத்தில், சாதாரண குடிமக்களுக்கான பாதுகாப்பு எப்படியிருக்கும்' என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் குறிப்பிட்டுள்ளார்.
தனக்கு சாதகமான புள்ளி விவரங்களை வெளியிட்டு தலைநகரில் சட்டம் ஒழுங்கு சீராக இருப்பதாக காட்டிக் கொள்கிறது. முதல்வரின் காரே திருடுபோகும் ஒரு மாநில நிர்வாகத்திடம் இருந்து, ஒரு சாதாரண குடிமகன் என்னதான் எதிர்பார்க்க முடியும்? தில்லி காவல்துறையானது உங்களது நேரடிக் கட்டுப்பாட்டில் வருகிறது. சட்டம் ஒழுங்கை சரிசெய்ய அதனை சரியாக பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். அதற்குரிய ஒத்துழைப்பை அளிக்க தயாராக இருக்கிறோம் என்று முதல்வர் கேஜரிவால் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தில்லி நகரத்தில் மத்திய உள்துறை அரசின் கீழ் வரும் காவல்துறை கண்காணிப்பில் தான் இந்தியாவிலே அதிகபட்சமாக 30,449 கார்கள் மேலும் கடந்த வருடத்தில் மட்டுமே திருடு போய் உள்ளது என்கிறது மத்திய அரசின் குற்ற அமைப்பின் புள்ளிவிவர குறிப்பு.