நடிகர் சந்தானம் 100க்கும் மேற்பட்ட படத்தில் நடித்துள்ளவர் . வளசரவாக்கத்தில் உள்ள இன்னோவேட்டிவ் கன்ஸ்ட்ரக்சன் கம்பெனியுடன் சேர்ந்து குன்றத்தூர் அருகே திருமண மண்டபம் கட்ட, அந்நிறுவனத்திற்கு ரூ 3 கோடி முன்பணமாக கொடுத்துள்ளார்....
பணத்தை பெற்றுக்கொண்ட அந்த நிறுவனம் திருமணம் மண்டபத்தை 3 ஆண்டுகளாக கட்டாமல் இழுத்தடித்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்குமிடையே போடப்பட்ட ஒப்பந்தம் கேன்சல் செய்யப்பட்டது.
வழக்கறிஞர் ஒருவரை தாக்கிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு நடிவர் சந்தானம் மனு அளித்துள்ளார்.
இந்த நிலையில் சந்தானம் கொடுத்த, 3 கோடி ரூபாயில் சில லட்சங்களை சம்பந்தப்பட்ட நிறுவனம் இன்னும் கொடுக்க வேண்டியுள்ளது. மீதி பணத்தை கேட்கச் சென்ற சந்தானத்துக்கும், இன்னோவேட்டிவ் கன்ஸ்டிரக்ஸன் நிறுவன சண்முக சுந்தரம், அவரது நண்பரும் வழக்கறிஞருமான பிரேம் ஆனந்துக்குமிடையே வாய் தகராறு முற்றி கைகலப்பானது.
இதையடுத்து நடுரோட்டில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் பிரேம் ஆனந்துக்கு மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது.
இதுகுறித்து இரண்டு தரப்பினரும், வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். வழக்கறிஞரை தாக்கியதாக நடிகர் சந்தானம் மீது மூன்று பிரிவுகளில் சென்னை வளசரவாக்கம் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பணம் தராமல் ஏமாற்றிய நபர் பிஜேபி கட்சியை சேர்த்தவர் என்பதால் பிஜேபி தமிழக தலைவர் தமிழிசை அவரது கட்சி பிரமுகரை ஆதரித்து நடிகர் சந்தானம் எதிர்த்து கண்டித்துள்ளார் . இதனையடுத்து அதிகாரம் மிக்க ஆளும் கட்சி சாயம் பூசப்படுவதால் இந்த விவகாரத்தில் கைது செய்யக்கூடும் என்று நடிகர் சந்தானம் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரனைக்கு வர உள்ளது.